Tamannaah - நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவர் சௌகரியமாக உணர செய்தார் - தமன்னா ஓபன் டாக்

சென்னை: Tamannaah (தமன்னா) நெருக்கமான காட்சியில் நடித்தபோது நடிகர் சுஹைல் தன்னை சவுகரியமாக உணர செய்ததாக நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார்.

தமன்னாதான் கடந்த சில வாரங்களாக ஹாட் டாபிக்காக இருந்துவருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடு நடித்தார். அதன் பிறகு அவருக்கு இங்கு மார்க்கெட் சரிய தெலுங்கில் ஓரளவு முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தாஅர். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் இப்போது கால் பதித்து அங்கும் தனது திறமையை காட்டி கலக்கிவருகிறார்.

 Tamannaah Talks about Intimate scenes jee kardha web series

பாலிவுட்டில் தமன்னா: கோலிவுட், டோலிவுட்டில் நடித்தபோது ஓரளவு கிளாமராக நடித்துவந்த அவர் பாலிவுட்டில் கொஞ்சம் அதிகமாகவே கிளாமரை காட்டிவருகிறார். அதேசமயம் சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதன் காரணமாக அவருக்கு மார்க்கெட் அங்கு உயர்ந்துள்ளது. அவர் நடித்த பிளான் ஏ பிளான் பி உள்ளிட்ட படங்கள் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றுத் தந்தது.

ஜீ கர்தா: இப்படிப்பட்ட சூழலில் ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். சில நாட்களுக்கு முன்பு அது அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அதில் ஓவர் கவர்ச்சியும், சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்ததன் காரணமாக தமன்னாவா இது என ரசிகர்கள் வாயை பிளந்தனர். மேலும், தமன்னாவுக்கு ஹாலிவுட் ஆசை வந்துவிட்டது அதனால்தான் அவர் இவ்வளவு தாராளம் காட்டுகிறார் என்ற கமெண்டையும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூற அதை தீவிரமாக மறுத்தார் அவர்.

 Tamannaah Talks about Intimate scenes jee kardha web series

லஸ்ட் ஸ்டோரிஸ் 2: அதேபோல் ஜூன் 29ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் தமன்னா கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த ஆந்தாலஜியில் நடித்தபோது தன்னுடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க தொடங்கினார். அதை சமீபத்தில்தான் அவர் உறுதியும் செய்திருந்தார். இருப்பினும் இருவருக்குமான திருமணம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தமன்னா பேட்டி: இந்நிலையில் ஜீ கர்தா வெப் தொடரில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, "லாவண்யா (ஜீ கர்தாவில் தமன்னாவின் கதாபாத்திரம்) ரிஷப் (சுஹைல் ஏற்றிருந்த கதாபாத்திரம்) கதாபாத்திரத்தின் பயணத்தை விவரிக்க அந்தக் காட்சிகள் மிகவும் முக்கியம். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்தக் காட்சிகளை சும்மா வைக்கவில்லை.

அந்தக் காட்சிகள் முக்கியமானவை: ரிலேஷன்ஷிப் டிராமாவில் இதுபோன்ற நெருக்கமான காட்சிகள் எல்லாம் முக்கியமானவை ஆகும். மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அப்படித்தான் இருக்கும். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சுஹைல் என்னை சௌகரியமாக உணர செய்தார். அந்தக் கதாபாத்திரமாக எனக்கு பிரச்னை இல்லை. எங்கள் கதாபாத்திரங்கலின் உறவு குறித்து நானும் சுஹைலும் நன்கு புரிந்துகொண்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X