ஜிம் உடையில்... நடன இயக்குனருடன் ஆட்டம் போட்ட தமன்னா... வைரல் வீடியோ !

சென்னை : தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் தமன்னா.

தமன்னா தனது வலைத்தள பக்கத்தில், நடன இயக்குனருடன் கலக்கலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

விஷாலுடன்

விஷாலுடன்

தமன்னா கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. இதையடுத்து, நவம்பர் ஸ்டோரி என்ற க்ரைம் த்ரில்லிங் வெப் தொடரில் நடித்திருந்தார். இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

சமையல் நிகழ்ச்சியில்

சமையல் நிகழ்ச்சியில்

ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறையாகும். இதற்காக பெரும் தொகையை தமன்னா சம்பளமாக கேட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

தமன்னா தெலுங்கில் சீட்டிமார், மாஸ்ட்ரோ, குர்துண்டா சீதாகாலம், எப்.சி, தட் ஈஸ் மகாலட்சுமி, இந்தியில் போல்சுடியன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.

தமன்னா டான்ஸ்

தமன்னா டான்ஸ்

தமன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நடன இயக்குனரான ஷாஜியா சாம்ஜியுடன் இணைந்து "கிஸ் மீ மோர்" என்ற பாடலுக்கு நேர்த்தியாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்திலேயே 3லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் தமன்னாவின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோவை மீண்டும் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X