என்ன தமன்னாவுக்கு திடீர்னு மீசை முளைச்சிருக்கு.. வைரலாகும் வீடியோ.. ஓஹோ அதுதான் விஷயமா!

சென்னை: மீசையுடன் மாணிக்கமாக மாறியுள்ள தமன்னாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமன்னா நடித்துள்ள நவம்பர் ஸ்டோரி தொடர்பான விளம்பரத்துக்குத் தான் இப்படியொரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார்.

நவம்பர் மாதமே வெளியாக வேண்டிய அந்த வெப் தொடர் தற்போது தான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமன்னாவுக்கு மீசை

தமன்னாவுக்கு மீசை

நடிகை தமன்னா திடீரென மீசையுடன் இருக்கும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். தனது பெயர் தமன்னா இல்லை என்றும் மாணிக்கம் என்றும் கூறி அந்த வீடியோவில் அதகளம் செய்துள்ளது ரசிகர்களை ரசிக்க வைத்தும் சிரிக்க வைத்தும் வருகிறது.

நவம்பர் ஸ்டோரி

நவம்பர் ஸ்டோரி

இயக்குநர் இந்திரா சுப்பிரமணியம் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள த்ரில்லர் வெப்சீரிஸான நவம்பர் ஸ்டோரி ரிலீசுக்காகத் தான் இப்படியொரு வித்தியாசமான விளம்பரத்தை நடிகை தமன்னா மேற்கொண்டுள்ளார். மேலும், அந்த விளம்பரத்தில் தனது வெப்சீரிஸை பார்க்கும் படி பிறரிடம் தமன்னா கெஞ்சுவது சிறப்பாக உள்ளது.

நாங்க ஏன் பார்க்கணும்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜெயம் ரவியின் பூமி, காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் ஆர்யாவின் டெடி இன்னும் ஏராளமான சூப்பரான படங்கள் உள்ள நிலையில் நாங்க ஏன் உங்களோட நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் பார்க்கணும்னு ஒருவர் கேட்க, பாருங்க இதுல தமன்னா நடிச்சிருக்காங்க என செம ஃபன்னாக வீடியோ போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்.

மிஸ்ஸான மீசை

மேலும், இன்னொரு வீடியோவில் அந்த மீசையை வைக்க தான் பட்ட சிரமங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் தமன்னா. செம திரில்லிங்கான வெப்சீரிஸுக்கு இப்படி நகைச்சுவையாக விளம்பரப்படுத்தி இருப்பதே புதிய அணுகுமுறை என்று பலரும் நடிகை தமன்னாவை பாராட்டி வருகின்றனர். 11த் ஹவர் எனும் இன்னொரு வெப்சீரிஸிலும் நடிகை தமன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X