Jailer: ஏஐ இனி என்னலாம் பண்ணுமோ? காவாலா பாட்டுக்கு சிம்ரன், காஜலை ஆட வைத்து டான்ஸ்.. குஷியான ஃபேன்ஸ்!
சென்னை: ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தில் லிரிக் வீடியோவாக வெளியான இந்த பாடல், மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தில் காவாலா பாடலுக்கு ஆடிய சிம்ரன், காஜல் அகர்வால்: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் அடுத்தமாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்வேட்டை நடத்தியது. இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். படம் அடுத்தடுத்த அப்டேட்களுடன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. காவாலய்யா என்ற இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது. ரசிகர்களின் அதிகமான லைக்ஸ்களை பெற்று யூடியூபில் ட்ரெண்டிங்கிலும் இருந்தது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை அள்ளியது. அந்த வகையில் தற்போது இந்தப் பாடலை ரசிகர்கள் மேலும் சிறப்பாக்கி வருகின்றனர். AI மூலம் இந்தப் பாடலுக்கு மற்ற முன்னணி நடிகைகளை ஆட விட்டுள்ளனர். அந்த வகையில் நடிகை சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் தமன்னாவின் வீடியோவில் ஏஐ மூலம் இணைத்து இந்த வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோவில் சிம்ரனும் காஜல் சிறப்பாக பொருந்தியுள்ளனர். வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், உண்மையாகவே அவர்கள் ஆடியுள்ளனரா என்று சந்தேகம் கொள்ளும்வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சிம்ரம், தமன்னாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் சிறப்பான எடிட்டிங் என்றும் இந்த வீடியோவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











