Tamannaah - ரசிகர் செய்த செயல்.. விமான நிலையத்தில் கண் கலங்கிய தமன்னா

மும்பை: Tamannaah (தமன்னா) விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செய்த செயலை பார்த்து தமன்னா கண் கலங்கினார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

பிஸி நடிகை: அதற்கு பிறகு தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு அவரது கரியர் உச்சத்தில் இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார்.

Tamannaah was shocked to see what a fan did at the airport

தமிழில் குறைவு; பாலிவுட்டில் பிஸி: பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருப்பினும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஜெயிலர்: தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 : தமன்னா நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸ் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியானது. அருணிமா ஷர்மா இயக்கியிருந்த அதில் தமன்னாவின் க்ளாமர் தூக்கலாகவே இருந்தது. இதனையடுத்து அவர் லஸ்ட் ஸ்டோரி 2வில் விஜய் வர்மாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த ஆந்தாலஜி நாளை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.

கலங்கிய தமன்னா: இந்நிலையில் மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தமன்னாவை அவரது ரசிகர் காலில் விழுந்து வணங்கினார். அதனையடுத்து பூங்கொத்தையும் கடிதத்தையும் வழங்கினார். அதை தமன்னா வாங்கும்போது ரசிகரின் கையில் தனது முகம் பச்சை குத்தப்பட்டிருந்ததை கவனித்தார். இதனை எதிர்பார்க்காத தமன்னா தன் மீது இவ்வளவு அன்பை வைத்திருக்கும் ரசிகரை நினைத்து அழுதபடி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X