ஒரே நாளில் 2.. பிரபுதேவா, தமன்னா செம பிளான்.. கோலிவுட்டில் இது அரிது!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ஒரே நடிகரின் இருவேறு படங்கள் வெளியான காலமெல்லாம் உண்டு.

இதற்கு முன்னதாக 1998-ல் கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளி தா, கிழக்கு மலை ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகின. பின்னர் பரத் நடிப்பில் வெயில், சென்னை காதல் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின.

Tamannah and Prabudaeva to release their two movies on same day

தற்போது அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. பெரும்பாலான நடிகர்கள், ஒரு படத்தை முடித்த பின்பே அடுத்த படத்தை தொடங்குகின்றனர். இந்த நிலையில் பிரபுதேவா தமன்னா ஜோடி நடித்த, இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

Tamannah and Prabudaeva to release their two movies on same day

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான, திகில் திரைப்படம் தேவி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிரபுதேவா, தமன்னா ஜோடியே நடித்துள்ளனர். இவர்கள் தவிர நந்திதா, கோவை சரளா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் இந்த படம் மே 31-ம் தேதி தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகிறது.

Tamannah and Prabudaeva to release their two movies on same day

இதே தினத்தன்று, பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள காமோஷி என்ற திரைப்படமும் வெளியாகிறது. இதை தமன்னா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

இவர் கமல் நடிப்பில் உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கியவர். இந்த படத்தின் மூலம் ஒரே நாளில் வெளியாகும் 2 படங்களில் நடித்த ஜோடி என்ற சிறப்பை பிரபுதேவா, தமன்னா ஜோடி பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X