'ஜிகர்தண்டா' ரீமேக்கில் நடிக்கவிருக்கும் தமன்னா!

By Vignesh Selvaraj

Recommended Video

'ஜிகர்தண்டா' ரீமேக்கில் நடிக்கவிருக்கும் தமன்னா!- வீடியோ

மும்பை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இப்படம் இந்தியில் ரீ-மேக்காக உள்ளது. அஜய் தேவ்கன் தயாரிக்க, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும், சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தமன்னாவிடம் பேசி வருகிறார் அஜய் தேவ்கன்.

Tamannah in jigarthanda remake

லட்சுமி மேனன் நடித்த ரோலில் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அஜய் தேவ்கன் உடன் ஹிம்மாத்துவாலா என்ற படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதனால் நிச்சயம், அஜய் படத்தில் அவர் நடிப்பார் என நம்பப்படுகிறது.

விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்தப் படத்தில் லட்சுமி மேனன் கடைகளில் திருடும் பெண்ணாக நடித்திருப்பார். கல்ட் வகைப் படமான 'ஜிகர்தண்டா' ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X