பாலா படத்தில் விஷாலுடன் ஜோடி சேரும் தமன்னா
விஷால் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் பாலா. விஷாலின் ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கிறாராம்.
இயக்குநர் பாலாவின் பரதேசி படத்தின் தோல்விக்குப் பின்னர் பாலாவின் படத்தில் நடிக்க பலரும் யோசித்து வந்த நிலையில் விஷால் நடித்து தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகின.
விஷால் ஏற்கனவே பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடையாளமாக இப்போது பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால்.

நகைக்சுவைக் கதை
இயக்குநர் பாலா தனது அடுத்த படத்தை நகைக்சுவை படமாக இயக்க உள்ளாராம். இந்த படத்தை தயாரிப்பது விஷால்.

பாண்டியநாடு வெற்றி
விஷால் முதன்முறையாக பாண்டியநாடு படத்தை தயாரித்து நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடிக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது பாலா இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.

விஷாலுக்கு பிடித்த கதை
பத்து நாட்களுக்கு முன்பு பாலாவை சந்தித்த விஷால், பாலா கூறிய இரண்டு வரி நகைச்சுவை கதையை கேட்டு ரொம்ப மகிழ்ச்சியானாராம். படத்தை தானே தயாரிப்பதாகவும் கூறி ஒரு பெரிய தொகையை அட்வான்ஸும் கொடுத்துவிட்டாராம்.

தமன்னா ஜோடி
இந்த படத்தில் நடிக்க தமன்னா தான் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாலா படத்தில் நடித்தால் வித்தியாச நடிப்பு இருக்கும் என தமன்னாவும் இதற்கு ஓகே சொல்லி விட்டார் என கூறப்படுகிறது.

மீண்டும் ஆர்யா
விஷாலுடன், இரண்டாவது ஹீரோ கதாபாத்திரத்திற்கு ஆர்யா, அல்லது அதர்வா இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விக்ராந்த்
பாண்டியநாடு வெற்றியால் விஷால் முழு தயாரிப்பாளராகவே மாறிவிட்ட விஷால், தற்போது விக்ராந்தை வைத்தும் ஒரு படம் தயாரிக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











