அதை பண்ணலாமா வேணாமா... குழப்பத்துடன் தமன்னா வெளியிட்ட புகைப்படம்!

சென்னை : பெட்ரமாக்ஸ் என்ற படத்தை தொடர்ந்து நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி ஓடிடியில் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்று பட்டையை கிளப்பியது.

நொடிக்கு நொடி திகில் கிளப்பும் நவம்பர் ஸ்டோரி தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அத பண்ணலாமா வேணாமா என குழப்பத்துடன் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களிடம் அட்வைஸ் கேட்டு வருகிறார்.

அதே கூட்டணியில்

அதே கூட்டணியில்

வெங்கடேஷ் ,வருண் தேஜ் மற்றும் தமன்னா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான F2 பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதுடன் அந்த ஆண்டு வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க காமெடி கதை களத்தை கொண்ட F2 பெரும் வரவேற்பு பெற்றது தொடர்ந்து தற்போது அதே கூட்டணியில் F3 உருவாகி வருகிறது.

வெற்றியைப் பெறவில்லை

வெற்றியைப் பெறவில்லை

நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வரிசையில் நடிகை தமன்னாவும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முதல் முறையாக லீட் ரோலில் நடித்த பெட்ரமாக்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் நவம்பர் ஸ்டோரி என்ற ஹாரர் வெப் சீரிஸில் நடித்திருந்தது சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

இனி அடிக்கடி தமன்னாவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் எதிர்பார்க்கலாம் என ஒருபுறம் டாக் வருவதைப் போலவே அறிமுக இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகள் இருந்தால் கூறுங்கள் என கேட்டு வருகிறாராம். மேலும் ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த குயின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரை மிச்சப்படுத்த

தண்ணீரை மிச்சப்படுத்த

நவம்பர் ஸ்டோரி வெற்றியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் தமன்னா காலையில் எழுந்தவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு குளிக்கலாமா வேணாமா.. என ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் பதிலளித்து வர அதில் ஒருவர் குளிக்க வேண்டாம் தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும். என பதிவிட்டு இருக்க அதற்கு தமன்னா அச்சச்சோ வேண்டாம் என காமெடியாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: tamannah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X