ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!.. ரசிகர்களை ஈர்க்கும் தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி
சென்னை: இயக்குனர் இந்திரா சுப்பிரமணியன் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் தயாராகியுள்ள வெப் தொடர் நவம்பர் ஸ்டோரி.
இதில் தமன்னா உட்பட ஜி.எம்.குமார், பசுபதி மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விகடனின் முதல் தயாரிப்பான நவம்பர் ஸ்டோரி நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாகியுள்ளது.

சுவாரசியமான கதை
கதையில் தமன்னாவின் தந்தை க்ரைம் நாவல் எழுத்தாளர் ஆவார். ஆரம்பத்தில் நடக்கும் ஒரு கொலையை போலீசார் விசாரிக்க தொடங்க அந்த குற்றத்தை செய்தவர் தமன்னாவின் தந்தை என சந்தேகம் எழுகிறது. இதை தமன்னா எதிர்கொண்டு தன் தந்தை நிரபராதி என்பதை நிரூபிப்பாரா!? இல்லையா!? போன்ற கேள்விகளுடன் கதை நகருகிறது.

வெற்றி பெற்றுள்ளது
இதற்கு முன் வெளிவந்த ஹாட் ஸ்டார் வெப் தொடர்கள் (தமிழில்) சோபிக்க தவறிய நிலையில் நவம்பர் ஸ்டோரி அந்த தவறை செய்யாமல் வெற்றி பெற்றுள்ளது. க்ரைம் ஸ்டோரியை இயக்குனர் சரியாக கையாண்ட விதம் நவம்பர் ஸ்டோரியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றுள்ளது.

பெரிய பக்கபலம்
இந்த வெப் தொடருக்கு கதையும் & நடிப்பும் பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா என முன்னனி கதாபாத்திரங்கள் முதற்கொண்டு அனைவரும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர். இசையும் ஈர்த்துள்ளது.
Recommended Video

வைலன்ஸ் காட்சிகள்
7 எபிஸோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் கதையின் தொடக்கத்திலிருந்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. வைலன்ஸ் காட்சிகளும் நிறைந்துள்ளது. க்ரைம் ஸ்டோரிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த வெப் தொடர் சரியான தீனி.


Click it and Unblock the Notifications











