Tamannah Salary: ஜெயிலரில் தமன்னா சம்பளம் இத்தனை கோடியா... எல்லாம் காவாலா பாட்டுக்காக மட்டும் தானா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. தலைவர் ரசிகர்களின் அலப்பறையுடன் அமர்க்களமாக வெளியான ஜெயிலர் முதல் நாளில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு பாடலும், சின்ன கேமியோ ரோலுக்காகவும் மட்டுமே பல கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம் தமன்னா.

 Tamannah Salary: Tamannah got a salary of 3 crore rupees for the Jailer film

ஜெயிலருக்கு தமன்னா வாங்கிய சம்பளம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர், இறுதியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. ரஜினி, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் என செம்ம மாஸ் கூட்டணியில் உருவான ஜெயிலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி, சுனில், விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே ஜெயிலரில் நடித்துள்ளது. மல்டி ஸ்டார்ஸ் படமான ஜெயிலரில் தரமான கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதனால் இனிவரும் நாட்களிலும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்னொரு பக்கம் தமன்னா ஆர்மியும் ஜெயிலர் படத்தை பார்க்க வெறிகொண்டு தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஜெயிலரின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடலில் தமன்னா வேற லெவல் வைப் கொடுத்திருந்தார். அனிருத் இசையில் தமன்னா ஆடிய கிளாமர் ஆட்டம் ரசிகர்களை சூடாக்கியிருந்தது. இதனால், ஜெயிலர் படத்திலும் தமன்னாவின் போர்ஷன் அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இன்று வெளியான ஜெயிலரில் தமன்னாவின் என்ட்ரி சூப்பராக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இரண்டாவது பாதியில் தான் அவரது தரிசனம் கிடைத்துள்ளது. மேலும் தமன்னாவின் போர்ஷனும் ரொம்பவே குறைவாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் தமன்னா.

ஒரேயொரு பாடலும் சில காட்சிகள் மட்டுமே நடித்துள்ள தமன்னாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமா என ரசிகர்களே திகைத்துப் போயுள்ளனர். காவாலா பாடல் வெளியான பிறகே ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியதால், இதெல்லாம் ஒரு விஷயமே இல்லையென்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X