'இனி அவ்வளவுதான், பிழைக்கவே மாட்டேன்'னு முடிவு பண்ணிட்டேன்.. கொரோனா பயம் பற்றி நடிகை தமன்னா ஷாக்!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது இனி பிழைக்க மாட்டேன் என்றே நினைத்தேன் எனக் கூறியுள்ளார் நடிகை தமன்னா.
நடிகை தமன்னாவுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக வந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

கொரோனா டெஸ்ட்
திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

பிழைக்க மாட்டேன்
இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், கொரோனா தந்த பயம் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா உறுதியானதும் பயந்து விட்டேன். சிகிச்சை எடுக்கும்போது, இனி பிழைக்க மாட்டேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் அதிகமாக இருந்தது.

தைரியம் கொடுத்தனர்
மருத்துவர்கள்தான் காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது என்பதும் உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் எனவும் தோன்றியது. இப்போது கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன்.
Recommended Video

தேறி வருகிறேன்
உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் கொரோனா வந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள் பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போகிறது என்று நினைக்கிறேன். அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











