Tamannah: காவாலா பாட்டுல மட்டும் தான் தமன்னா... படத்துல ரொம்ப போரிங்... ஜெயிலர் ரசிகர்கள் ரியாக்ஷன்
சென்னை: இன்று வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் ரிலீஸாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேநேரம் ஜெயிலர் படத்தில் தமன்னாவை அதிகம் எதிர்பார்த்துச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாம்.
காவாலா பாடலில் இருந்த வைப் படம் முழுக்க இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தமன்னாவை ரசிக்க முடியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தமன்னாவை காட்டி மோசம் செய்த நெல்சன்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தான் இன்று டாக் ஆஃப் தி சிட்டியாக இருக்கிறது. சென்னை, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட உலகம் முழுவதும் அலப்பறையாக வெளியானது ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள், இது தலைவரின் தரமான கம்பேக் என புகழ்ந்து வருகின்றனர். தலைவர் எப்போதும் நிரந்தரம் தான், அவரு இடத்தை யாராலும் பிடிக்கவே முடியாது கூஸ்பம்ப் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் பூனையாக வரும் ரஜினி, பின்னர் புலியாக மாறும்போது தியேட்டரே ஃபயர் மோடுக்கு மாறுகிறது என உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே இன்னொரு பக்கம் தமன்னா ஆர்மி சார்பில் இயக்குநர் நெல்சனுக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. அதாவது ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக 'காவாலா' சாங் வெளியானது. அனிருத்தின் இசையில் தமன்னா செம்ம கிளாமராக ஆட்டம் போட்டு வைப் கொடுத்திருந்தார். தமன்னாவின் ஆட்டம் ரஜினி ரசிகர்களுக்கே செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது தான் இதில் ஹைலெட்டான விஷயம்.

அதுமட்டும் இல்லாமல் ரீல்ஸிலும் மாஸ் காட்டிய காவாலா சாங், யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனைப் படைத்தது. காவாலா சாங் வைப்பிலேயே ஜெயிலர் படத்திலும் தமன்னா சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஒருகட்டத்தில் தமன்னாவுக்காகவே ஜெயிலர் படம் பார்க்கப் போவதாக ரஜினி ரசிகர்களே எமோஷனலாக கூறி வந்தனர். இதனால் ஜெயிலர் படத்தில் ரஜினியை விடவும் தமன்னா ஃபீவர் அதிகமாக இருந்தது.
ஆனால், இன்று வெளியான ஜெயிலர் படம் பார்த்துவிட்டு தமன்னா ரசிகர்கள் ரொம்பவே ஏமாந்துவிட்டார்களாம். முதல் பாதியிலேயே தமன்னாவின் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இரண்டாவது பாதியில் தான் தலைவியின் தரிசனம் கிடைத்துள்ளது. அப்போதும் கூட தமன்னாவின் போர்ஷனில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். காவாலா பாடலோடு தமன்னாவை கப்பலேற்றிவிட்டாரே நெல்சன் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











