இந்து முறைப்படி நடந்த காமெடி நடிகர் சதீஷ் திருமணம்… ராதாரவி, மிர்ச்சி சிவா நேரில் வாழ்த்து!

Recommended Video

Sathish Sindhu Marriage | Sivakarthikeyan | Vijay Sethupathi

சென்னை: மெரினா படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷின் திருமணம் இன்று காலை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்தை முன்னிட்டு நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ராதரவி, அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வதந்திகள்

வதந்திகள்

காமெடி நடிகர் சதீஷுக்கு பல நாட்களாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது. கடந்த ஆண்டு காமெடி நடிகர் சதீஷ் திடீரென திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தி வைரலாக பரவியது. ஆனால், அது வைபவ் நடிக்கும் திருமணத்தின் புகைப்படம் என்பது பின்னர் தெரிய வர பிரான்க்காக முடிந்தது.

சதீஷ் திருமணம்

சதீஷ் திருமணம்

காமெடி நடிகர் சதீஷ் திருமணம் குறித்து வெளியான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சிக்சர் பட இயக்குநர் சாச்சியின் சகோதரி சிந்துவை கரம் பிடித்துள்ளார். நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோட் சூட் போட்டு போஸ் கொடுத்த நடிகர் சதீஷ், தற்போது, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அகில உலக சூப்பர்ஸ்டார்

மிர்ச்சி சிவாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. மிர்ச்சி சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள சுமோ படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியானது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மிர்ச்சி சிவா, இன்று காலை நடைபெற்ற சதீஷின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.

ராதாரவி

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X