Siddharth net worth: அப்பவே பான் இந்தியா ஸ்டார்... ஆனாலும் சித்தார்த் சொத்து மதிப்பு இவ்ளோ தானா..?

சென்னை: ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சித்தார்த்.

தொடர்ந்து இந்தி, தெலுங்கு மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள சித்தார்த், இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்தார்த்தின் சொத்து மதிப்பு, சம்பளம், கார்கள் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Tamil Actor Siddharth Net Worth, Salary, Assets Details and Car Collections

சித்தார்த் நெட் ஒர்த்: ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். அதற்கு முன்பாக மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த சித்தார்த், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் ஹீரோவாகிவிட்டார். பாய்ஸ் கொடுத்த அறிமுகத்தால் தெலுங்கு, இந்தி திரையுலகிலும் சித்தார்த்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக தெலுங்கில் சித்தார்த் நடித்த நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா திரைப்படம் அதிரிபுதிரியான ஹிட் அடித்தது. இந்தப் படம் தான் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உனக்கும் எனக்கும் என்ற டைட்டிலில் தமிழில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்தியில் அமீர்கானுடன் நடித்த ரங் தி பசந்தி திரைப்படமும் சித்தார்த் கேரியரில் மைல் ஸ்டோன் எனலாம்.

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் சித்தார்த், சென்னை பையன் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டு மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சித்தார்த், 2007ல் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து சிங்கிளாக இருந்த சித்தார்த் தற்போது அதிதி ராவ் ஹைதாரி உடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். மேலும், கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே சித்தார்த்தின் சொத்து மதிப்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சித்தார்த் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்திலேயே அவருக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனாலும், தற்போது வரை அவருக்கு 70 கோடி மதிப்பிலான சொத்துகள் தான் உள்ளதாம். மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் சொந்தமாக வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Actor Siddharth Net Worth, Salary, Assets Details and Car Collections

அதேபோல், கார்கள் மீது அதிக ஆர்வம் உடைய சித்தார்த் ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஆடி A4 ரக கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம். மேலும், ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சித்தார்த், ஆண்டுக்கு 11 கோடி வரை சம்பாதிக்கிறாராம். சினிமா தவிர வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், சிங்கர், விளம்பர மாடல் எனவும் கலக்கி வருகிறார் சித்தார்த். சினிமாவில் பிஸியாக இருந்தும் 70 கோடி மட்டுமே சொத்து சேர்த்துள்ள சித்தார்த்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சித்தார்த், சோஷியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக அதிதி ராவ் ஹைதாரி உடன் ரீல்ஸ் செய்த வீடியோக்களை அதிகம் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு மிக முக்கியமான கேரக்டர் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X