சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை?..அரசியல் பெரும் புள்ளியால் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காலையிலிருந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரியவந்ததை அடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
போதை பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வந்தனர். அந்த நேரத்தில், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த சண்டையின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். அவர் போதை பொருள் டீலராக செயல்பட்டு வந்ததாக சொல்லப்பட்டதை அடுத்து போலீசார் பிரசாத்தின் ஃபோனை சோதனை செய்தனர். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் பல தடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, நடிகர் ஸ்ரீகாந்த் பிரசாந்திடம் இருந்து போதை பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறினார்.

போதை பொருளை பயன்படுத்தினார்: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பெற்று பயன்படுத்தி வந்ததாக பிரதீப் கூறியதை தொடர்ந்து இன்று காலை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு நடிகர் ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார். அவர் போதை மருந்தை உட்கொண்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக ராஜூவ் காந்தி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். மேலும், பிரதீப் குமார் அளித்த வாக்கு மூலத்தில், ஸ்ரீகாந்தும் மற்றொரு நடிகரான ஸ்ரீ கிருஷ்ணாவும், பிரசாத் மூலமாக தன்னிடமிருந்து கொக்கைன் வாங்கி கிளப் மற்றும் சினிமா பார்ட்டிகளில் அதை பயன்படுத்தினார்கள். அவர்கள் பயன்படுத்தியதை நானே நேரடியாக பார்த்தேன் என கூறியுள்ளார். மேலும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருளை நான் சப்ளை செய்திருக்கிறேன். இதன் மூலமாக லாபம் மட்டும் 4 லட்சம் ரூபாய் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. ஜிபே மூலம் ரூ 12 ஆயிரம் கொடுத்து போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
3வது குற்றவாளி: இதில் பிரசாத் முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக ஜான், மூன்றாவது குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், இதில், தொடர்புடைய மேலும் ஒரு நடிகரான ஸ்ரீ கிருஷ்ணா உள்ளிட்ட அடுத்த பிரபலங்களும் போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறாதா... எவ்வளவு பணப்பறிமாற்றம் நடந்தது... இவர்களிடம் வாங்கி போதை பொருளை கூடுதல் விலைக்கு விற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருள் தான், சப்ளை செய்ததாக பிரதீப் கூறியிருக்கும் நிலையில், 40 முறையும் அவரின் பயன்பாட்டுக்குத்தான் வாங்கினாரா என்று விசாரிக்க உள்ளனர். இதனால், இதில் தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தவும் உள்ளனர். போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











