மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா.. மனுஷன் உடைஞ்சு போயிட்டாரே
எர்ணாகுளம்: மொத்த மலையாள உலகையும் சோகத்தில் மூழ்கடித்த துக்கச் செய்தி என்றால் அது, நடிகர், இயக்குநர், டப்பிங் கலைஞர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகக் கலைஞராக வலம் வந்து கொண்டு இருந்தவர் ஸ்ரீனிவாசன். அவர் நேற்று அதாவது டிசம்பர் 20ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 69. அவரது உடல் இன்று அதாவது டிசம்பர் 21ஆம் தேதி கேரள அரசின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் வீட்டிற்கே சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் சூர்யாவைப் பாராட்டி வருகிறார்கள்.
மலையாள சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவர் ஸ்ரீனிவாசன். இவர் இயக்குநராக இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கு மாநில விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றது. மேலும் நடிகராக குறிப்பாக குணச்சித்திர நடிகராக பல படங்களில் மக்கள் மனதை வென்றவர் ஸ்ரீனிவாசன்.

ஸ்ரீனிவாசன் திரை வாழ்க்கை: மேலும் நடிகர் மம்மூட்டிக்கு அவரது தொடக்க காலங்களில் டப்பிங் பேசினார். இது மட்டும் இல்லாமல், மம்மூட்டி மற்றும் மோகன் லால் என இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். அவர்களுடன் நெருங்கிய நண்பராகவும் அன்பைப் பேணியவர். இவரது மறைவுச் செய்தி கேட்டதும், ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். மலையாள திரையுலகத்தினர் படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சூர்யா: மோகன் லால் மற்றும் மம்மூட்டி என இருவரும் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு, தங்களது தாளாத துயரத்தை வெளிப்படுத்தி வந்தனர். தமிழ் சினிமா நடிகர் சூர்யா ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் சிறுவயதில் இருந்தே ஸ்ரீனிவாசனை பார்த்து வியந்துள்ளேன். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி உளமாற என்னை சோகத்தில் ஆழ்த்தியது. அவரை ஒரு முறையாவது நான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இதனால் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். அவரது படமும் எழுத்தும் காலத்திற்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











