மக்களை சிரிக்கவும் வைத்து… ஞானத்தால் சிந்திக்கவும் வைத்தார்... யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

சென்னை : நடிகர்விவேக்கின்மறைவுக்குஇசையமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

மறைந்த விவேக்கிற்கு வையாபுரி, சாலமன் பாப்பையா, பவர் ஸ்டார் புகழ் அஞ்சலி | Filmibeat Tamil

சூர்யா, ஜோதிகா, விஜய்சேதுபதி, நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, கவுண்டமணி, நடிகை ஆர்த்தி, இந்துஜா உள்ளிட்டபலரும் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விவேக்கின் இல்லம் இருக்கும் இடத்தில் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் நடிகர்களுடன்

இளம் நடிகர்களுடன்

தமிழ் சினிமாவில்முன்னணி நகைச்சுவைநடிகராக திகழ்ந்தவர்நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள்முதல் இளம் நடிகர்கள்வரை அத்தனை பேருடனும்இணைந்து நடித்துள்ளார்.

மருத்துவரின் கண்காணிப்பில்

மருத்துவரின் கண்காணிப்பில்

நேற்று மாரடைப்பால்பாதிக்கப்பட்டவிவேக் சென்னையிலுள்ளதனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குஆஞ்சியோகிராம்உள்ளிட்டதீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் இதயத்தின் செயல்பாடு குறைந்து இருந்தால் அதன் வேகத்தை அதிகரிக்க அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். 24 மணி நேரம் கழித்தே, அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என மருத்துவமனை தரப்பில், நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டது.

திரையுலகினர் அதிர்ச்சி

திரையுலகினர் அதிர்ச்சி

இதையடுத்து விவேக் மீண்டு வர வேண்டுமெனபிரபலங்களும், ரசிகர்களும்மனமுருகிபதிவிட்டனர். இந்நிலையில்சிகிச்சைபலனின்றிஇன்று காலை அவரது உயிர் பிரிந்தது. விவேக்கின்மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும்பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும்ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்விவேக்கின்உடலுக்கு வைக்கப்பட்டுளள்து. பிரபலங்களும், ரசிகர்களும், பொது மக்களும்அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

மிகப்பெரிய இழப்பு

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், உண்மையிலேயே வெற்றிகரமான நபர் என்பவர், மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர் தான். விவேக் சார் ஒரு நல்ல மனிதர், அவர் தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல், அவரது ஞானத்தால் மக்களை சிந்திக்கவும் வைத்தார். இது நமக்கு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X