twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்

    By Shankar
    |

    Sarathkumar
    சென்னை: சேவை வரியை ரத்து செய்யக் கோரி நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்று டெல்லி சென்றனர்.

    திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் நடிகைகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று, சேவை வரியை ரத்து செய்யக் கோரினர். தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகளும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, நடிகர்- நடிகைகளிடம் சேவை வரி பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று டெல்லியில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.

    பட்ஜெட் குழு தலைவர் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான், மத்திய அரசு வருவாய் துறை செயலாளர் சுமீத்போஸ் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

    இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள்மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றனர்.

    English summary
    Tamil actors to discuss on service tax with union govt officials today in Delhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X