Year Ender 2025: தமிழ் சினிமாவில் ‘சத்தமில்லா’ ஹீரோக்கள்.. இவங்களுக்கே இந்த நிலைமையா?
சென்னை: 2025 ஆம் ஆண்டின் கடைசி கட்டத்திற்கு வந்து விட்டோம். இந்த ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே இருக்கின்றன. இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி, அஜித்குமாரின் குட் பேட் அக்லி, சிவகார்த்திகேயனின் மதராஸி, டிராகன், டியூட், மாமன், டி.என்.ஏ, ஃபேமிலி டூர், மதகஜராஜா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால், பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்று சொல்லப்படும் சில டாப் ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டு ஒன்றுக்கூட வெளியாகவில்லை.
சிலர் நடிகர்கள் நல்ல கதைக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள், சில நடிகர்களின் படங்கள் தொழில்நுட்ப பிரச்சனை காரணங்களால் தள்ளிப்போய் உள்ளது. இதனால் ரசிகர்கள்? அவர்களின் பட அப்டேட் ஏதாவது வருமான என காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனார்கள். அப்படி இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் போன நடிகர்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தளபதி விஜய்: கோடான கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் இரண்டுவிதமான ரோலில் நடித்து அசத்தி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந் தேதி தான் வெளியாக உள்ளது. ஜனநாயகன் படத்திற்குப் பிறகு, சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்து உள்ளதால், இந்த படத்தின் மீதான ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் உள்ளது.

கார்த்தி : சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அரவிந்த் சாமியுடன் இணைந்து மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். 2024ம் ஆண்டின் இறுதியில் வெளியான இந்த படம் நல்ல வசூலை அள்ளியப்போதும் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு எந்தப்படமும் வெளியாகவில்லை. ஆனால் கார்த்தியின் கைவசம், வா வாத்தியார், சர்தார் 2, மார்சல் போன்ற படங்கள் உள்ளன. வா வாத்தியார் படம் டிசம்பர் 5ந் தேதி வெளியாக இருந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதையடுத்து படக்குழு டிசம்பர் 12ந் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அந்த தேதியிலும் படம் வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஆர்யா: நடிகர் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், சர்பேட்டா பரம்பரை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருப்பார். திறமையான நடிகரான இவர் நடிப்பில் இந்த ஆண்டு எந்தப்படமும் வெளியாகவில்லை. தற்போது ஆர்யா பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அசோக் செல்வன், மற்றும் தினேஷ் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படங்கள் இல்லை: அதே போல, விஷால் நடிப்பில் இந்த ஆண்டு மதகஜராஜா படம் வெளியானது. இந்த படம் கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு முன்பு விஷால் நடித்த படமாகும். இந்த ஆண்டு விஷால் மகுடம் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு தான் வெளியாக உள்ளது. அதே போல நடிகர் ஆதி, ஜெய் என பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஏமாற்றம் தரும் ஆண்டாகவே அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிரகாசமான ஆண்டாக அமைய தமிழ் பிலிமி பீட் அவர்களை வாழ்த்துகிறது.


Click it and Unblock the Notifications











