டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்… யாரெல்லாம் வாங்கி இருக்காங்கனு பாருங்க !

சென்னை : கலைத்துறையில் சாதிக்கும் பல நடிகர்கள் தங்களது அர்ப்பணிப்பான நடிப்பாலும், கடினமான உழைப்பாலும் பல விருதுகளை வென்றுள்ளனர்.

தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் செயலாற்றுபவர்களை சிறப்பிக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு கௌரவ பட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளது.

சினிமா துறையில் சிறந்து விளங்கி நடிப்பிற்காக டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் 1954ல் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இவருக்கு 1974ம் ஆண்டு அரிசோனாவில் உள்ள தி வேர்ல்ட் யுனிவர்சிட்டி கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து எம்.ஜி,ஆரை கௌரவித்தது. மேலும் 1987ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் என்று ரசிகர்களால்அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார். 1986ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், கலைமாமணி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 2011ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள சர்ச் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. விஜயகாந்த் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

சின்னிஜெயந்த்

சின்னிஜெயந்த்

நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தவர் சின்னி ஜெயந்த். நடிப்பு, நாடகம் மற்றும் மிமிக்ரி ஆகியவற்றில் அவரது முயற்சிகளுக்காக 2013 ஆம் ஆண்டில் மாற்று மருத்துவத்திற்கான திறந்த சர்வதேச பல்கலைக்கழகத்தால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நடிகர்கமல்ஹாசன்

நடிகர்கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ்த் திரையுலகில் பண்முகத்தன்மைக் கொண்டவராக விளக்கி வருகிறார். அவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும், பத்மபூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி விருது போன்ற பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

நடிகர் நாசர்

நடிகர் நாசர்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் நாசர். தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியதற்காக அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நடிகர் பிரபு

நடிகர் பிரபு

நடிகர் சிவாஜி கணேசனின் மகனான பிரபு ஒரு தனித்துவமிக்க நடிகராவார். இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் 2011 இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

தனது எதார்த்தமான நடிப்பாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்கள் கூட்டத்தை அசையாமல் வைத்திருப்பவர் தளபதி விஜய். திரைத்துறையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருக்கும் இவரை கௌரவிக்கும் விதமாக 2007ம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தளபதி விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டும் நடிகர் விக்ரமுக்கு, 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு, 2015 ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. மேலும், சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Recommended Video

Silambharasan-ஐ கட்டி அனைத்து முத்தமிட்ட TR & Usha | Simbhu Speech After receiving Doctorate, STR
சிம்பு

சிம்பு

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தனது கடின உழைப்பால் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியராகவும், பாடகராகவும் , இயக்குனராகவும் பன்முக தன்மையோடு சிறந்து விளங்குகிறார். இதனை போற்றும் வகையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிம்புவை கௌரவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X