சாப்பிட கூட முடியாமல் நடித்த கமல்… உடலை சிதைத்த விக்ரம்.. தமிழ் சினிமாவின் ரியல் கிங்ஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஹீரோயின்களை காப்பாற்றுவதற்கு, அவர்களுடன் காதல் செய்வதற்காக மட்டும் இல்ல... ஒரு கதாபாத்திரமாக மாற, மக்களை நம்ப வைக்க அவர்கள் எடுக்கும் கஷ்டம் தான் அவர்களை வேற லெவலுக்கு கொண்டு போகிறது. சில நடிகர்கள் literally தங்களை மறந்து தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறி இருக்காங்க. அப்படி ரசிகர்களை வியக்க வைத்த சில transformation ஹீரோக்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கமல்: Transformatin என்று சொன்னதுமே முதலில் நினைவிற்கு வரும் ஹீரோ யார் என்றார். அவர் தான் உலகநாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவில் அழகான நடிகர் என பெயர் எடுத்து, பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த காலத்திலேயே 16 வயதினிலே படத்தில் வெறும் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு சப்பானியாக இயல்பாக நடித்து இருந்தார். இன்று வரை அந்த படம் கமலின் புகழ் பாடும் படமாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் 'தசாவதாரம்' படத்தில் ஜார்ஜ் புஷ், கிருஷ்ணவேணி பாட்டி, சிங்காரம் என 10 கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருந்தார்.
கமலின் தியாகம்: இந்த கதாபாத்திரத்தின் பெயரை சொல்வதற்கே நமக்கு மூச்சு முட்டிவிடும், ஆனால், ஒவ்வொரு கேரக்டருக்காக கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட்டு, வாயை திறந்து சாப்பிடக்கூட முடியாமல் படப்பிடிப்பு முடியும் வரை வெறும் ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு நடித்தார். அண்மையில் தாய் கிழவி இசைவெளியீட்டு விழாவில் கூட ராதிகா இதை பற்றி பெருமையாக பேசி கமலை பாராட்டி இருந்தார். தசாவதாரம் திரைப்படம் கமலின் டெடிகேஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டி.

விக்ரம்: இப்படி உடல் உழைப்பை கொடுத்து மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதில் பெயர் எடுத்தவர் நடிகர் சியான் விக்ரம். ஒரு டப்பிங் கலைஞராக இருந்து நடிகராக வர வேண்டும் என்று போராடி படிப்படியாக முன்னுக்கு வந்த இவர், ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் பாடி பில்டராக இருந்து பின் மாடலாக மாறி, கிளைமாக்ஸ் காட்சியில் 50 கிலோக்கும் குறைவான எடையில் தோன்றி இருப்பார். இந்த படத்தில் prosthetic மேக்கப் போட்டுக்கொள்ள தினமும் 10 முதல் 11 மணி நேரம் ஆகுமாம், அதை மேக்கப்பை எடுக்கவே இரண்டு மணி நேரமாகுமாம். இப்படி கடுமையான உடல் வலி, சாப்பாட்டை அர்ப்பணித்து அந்த படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மட்டுமில்லாமல் அண்மையில் வெளியான தங்கலான் படத்திற்காக மொத்தமாக உடல் எடையை குறைத்து அந்த படத்திற்காக மெனக்கெட்டு இருந்தார் சியான் விக்ரம்.

சூர்யா: பேரழகன் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில்
குன் விழுந்தது உடல் குறைபாடு உள்ளவராக நடிக்க, உடல் அமைப்பை மாற்றி, நடிக்க பல சிரமத்தை சந்தித்தார். இரண்டு கதாபாத்திரத்திற்கும் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காக குரலை மாற்றி, உடல் மொழியை மாற்றி நடித்திருந்தார். பேரழகன் சூர்யாவின் நடிப்பை அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக இன்று வரை இருந்து வருகிறது. அதே போல, அண்மையில் வெளியான கங்குவா படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடம் உடல் எடையை ஏற்றியும் குறைத்தும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது தான் வேதனை.
அதே போல அவன் இவன் படத்திற்காக விஷால் மறுகண் கொண்டவர் போல நடித்து இருந்தார். அப்படி நடித்ததற்காக தற்போது வரை அவருக்கு தலை வலியை அனுபவித்து வருகிறார். தமிழ் சினிமா ஹீரோக்கள் திரையில் மட்டும் அல்ல... அவர்கள் எடுத்த கஷ்டம், அர்ப்பணிப்பு தான் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. இந்த transformation stories பார்த்தால், ஒரு நல்ல பர்பாமென்ஸ்க்கு பின்னால் இருக்கும் தியாகம் எவ்வளவு பெரியது என்று புரியும்.


Click it and Unblock the Notifications











