காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. பீச்சில் அஞ்சலியின் க்யூட்னஸ்!

சென்னை: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை அஞ்சலி

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

கற்றது தமிழ், தரமணி, பேராண்மை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வரும் அஞ்சலி பீச் ஓரத்தில் சாவகாசமாக காற்று வாங்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது

எதார்த்தமான நடிப்பை

எதார்த்தமான நடிப்பை

கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அஞ்சலி இன்று வரை ஆனந்தி கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கற்றது தமிழ் கொடுத்து மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து அங்காடித்தெரு, ஆயுதம் செய்வோம், ரெட்டைசுழி ,மகிழ்ச்சி ,தூங்காநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவருக்கு எங்கேயும் எப்போதும் மற்றும் ஒரு திருப்புமுனை படமாக அமைந்து. மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்திருப்பார். அஞ்சலிக்கு ஜோடியாக ஜெய் நடித்து இருப்பார். ஜெய் மற்றும் அஞ்சலியின் காம்பினேஷன் மிகவும் நன்றாக இதில் ஒர்க் அவுட் ஆகி இருக்க ஜெய் அஞ்சலி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் உருவாகினர்.

நிவின் பாலி ஹீரோவாக

நிவின் பாலி ஹீரோவாக

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் கற்றது தமிழ் தரமணி பேரன்பு உள்ளிட்ட படங்களில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்து இருப்பார். இந்த நிலையில் மீண்டும் ராம் இயக்கத்தில் அஞ்சலியை புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வர முதல் கட்டப்படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது இதில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ராம்சரனின் 15 வது படமாக

ராம்சரனின் 15 வது படமாக

இதுவரை தமிழில் மட்டும் படங்களை இயக்கி இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரெடுத்த சங்கர் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார் இந்த படம் ராம்சரனின் 15 வது படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய வேடத்தில் அதிகாரியாக நடித்து வருகிறார்.

பீச் ஓரத்தில் காற்று வாங்கிய

பீச் ஓரத்தில் காற்று வாங்கிய

இவ்வாறு தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்சலி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் இவர் இப்பொழுது பீச் ஓரத்தில் காற்று வாங்கிய க்யூட்னஸ் ஓவர்லோடு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X