தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை.. வெளியானது லிஸ்ட்.. இன்று தொடங்குகிறது!

By

ஐதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் பிரபல தமிழ் நடிகையும் பங்குபெறுகிறார்.

ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கிற டிவி நிகழ்ச்சி, பிக் பாஸ். இந்தியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரவேற்பு நன்றாக இருந்ததால் மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட்டது.

இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பானது.

சல்மான் கான்

சல்மான் கான்

இந் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். 4-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 4 ஆவது சீசன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தாமதமானது.

தமிழ் பிக்பாஸ்

தமிழ் பிக்பாஸ்

ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த முறை நடத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாக இருப்பதை சேனல் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-க்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன்பே வெளியானது.

தெலுங்கு பிக் பாஸ்

தெலுங்கு பிக் பாஸ்

ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் சீசன் 4 குறித்த, புதிய புரமோ வெளியாகி வந்தது. கடைசியாக வெளியான புரமோவில் நாகார்ஜுனா மூன்று கெட்டப்களில் தோன்றி இருந்தார்.மூன்று தோற்றங்களில் அவர் வந்த புரமோ, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மோனல் கஜ்ஜார்

மோனல் கஜ்ஜார்

இதில் பிரபல தமிழ் நடிகை மோனல் கஜ்ஜாரும் கலந்து கொள்கிறார். இவர், தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

அம்மா ராஜசேகர்

அம்மா ராஜசேகர்

இவரை அடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளவரும் இயக்குனருமான அம்மா ராஜசேகரும் இதில் பங்கேற்கிறார். மேலும் சமீபத்தில் நடிகை எஸ்தர் நோரன்காவை விவாகரத்து செய்த பாடகர் நோயல் சீன், இயக்குனர் சூர்ய கிரண், துணை நடிகை கராத்தே கல்யாணி, யூடியூபர் கங்காவ்வா, நிகழ்ச்சி தொகுப்பாளர் லாஸ்லியா மஞ்சுநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X