சட்டையை கழட்டிவிட்டு ஜிம்மில் ஷாலு ஷம்மு செம வொர்க்கவுட்.. என்னவொரு வெறித்தனம்!
சென்னை : சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு ஜிம்மில் சட்டையை கழட்டிப்போட்டு வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.
வாட்டசாட்டமான உடல்வாகு, பார்த்தவுடன் சுண்டிஇழுக்கும் அழகு, என ரசிகர்களை தனது அழகால் இம்சித்து வருபவர் ஷாலு ஷம்மு.
இவர் நடித்தது என்னவோ ஒரு சில படங்கள் தான் என்றாலும், அம்மணியை சோஷியல் மீடியாவில் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மிகவும் பிரபலம்.

நம்ம ஷாலு ஷம்முவா இது
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யாராஜ் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒருசின்ன ரோலில் நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் ஷாலுவை பார்த்தால், ஷாலுவா இது என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு ஒல்லி பெல்லி இடையுடன் இருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சின்ன சின்ன ரோலில்
இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். அதன்பின், இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சி தாண்டவம்
நடிகை ஷாலு ஷம்மு பாலோவர்களை அதிகரிக்க கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். இவர் ஒரு காதலர் தினத்திற்கு தனது முன்னழகை பூங்கொத்தால் மறைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அது மட்டுல்லாமல் ஆண் நண்பர்களுடன் இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் அழகை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் பலர் இவர் பாலோ செய்யத் தொடங்கினர்
அவரா இவர் என்று
இணையத்தில் 736K ஃபாலோவர்களை வைத்திருக்கும் ஷாலு ஷம்மு, பல முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷாலு, ஜிம்மில் சண்டையை கழட்டிப்போட்டு, வொர்க்கவுட் செய்யும் வீடியோவை அப்லோடு செய்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











