ஆர்.ஆர்.ஆர் படம் பாத்தீங்களா?... சில காட்சிகளில் டோலிவுட் மசாலா ஓவர் !

சென்னை : ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் டோலிவுட் மசாலாத்தனம் ஓவராக இருந்ததாக தமிழ் ஆடியன்ஸ் கருத்துக்கூறி வருகின்றனர்.

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் எஸ்.எஸ். ராஜமௌலி.

பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் கடந்த மாதம் 25ந் தேதி வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ஆர்.ஆர்.ஆர்.

ஆர்.ஆர்.ஆர்.

1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ரத்தம் ரணம் ரௌத்தரம் எனப்படும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது.

டோலிவுட் மசாலா ஓவர்

டோலிவுட் மசாலா ஓவர்

இத்திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் இருந்தது. இந்த படத்தில் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம் பெற்று இருந்தது தான் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று தமிழ் ஆடியன்ஸ் கருத்து கூறி வருகிறார்கள். அதாவது ராமாயணக்கதையை மையப்படுத்தி, ராம் சரண் சிறையில் இருக்கும் போது அனுமானாக வந்த ஜூனியர் என்டிஆர் காட்சியும், சீதா கொடுத்தாங்க என்று அந்த டாலரை கொடுத்த காட்சியும் படத்தில் திணித்தது போல் இருந்தது.

மாஸ் படம்

மாஸ் படம்

இதே போல ராம்சரணை ராமர் போல மாற்றி கையில் வில்லையும் அம்பையும் கொடுத்தது டோலிவுட் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்ததாக தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகுபலி படத்தில் அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கவே முடியாமல் இருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராமாயண கதையை இடையில் சொருகிறதை தமிழ் ஆடியன்ஸ் விரும்பவில்லை. மற்ற படி பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறைவில்லாத மாஸ் திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X