தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வேண்டும் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Recommended Video
சென்னை: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவராஸ்யத்தை கூட்ட, பிரபலமான நடிகைகளை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்க வேண்டும் என்று இந்நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் நடத்தினாலும் அசுர தனமான வெற்றியும் அதிகப்படியான ரசிகர்களையும் சம்பாதித்து விடுகிறது. தமிழ் பிக்பாஸ் வீட்டில் கடந்த 4 நாட்களாக கிராமத்து கலைகளை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போட்டியும் வைக்கப்பட்டது. இன்டரெஸ்டிங் டாஸ்க் கொடுப்பது இவர்கள் செய்யும் டி.ஆர்.பிக்கு சக்ஸஸ்.

இதில், கைப்பாவை, கூத்து, வில்லுப்பாட்டு என பல கலைகளை வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கற்றுக்கொண்டனர். இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்களாக சேரன் மற்றும் முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல ரசிகர்கள் சேரன் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். முகேன் வித்தியாசமான ரசிகர்களை உடையவர். ஆதலால் அவரும் இந்த பிக் பாசில் ஜெயிக்க பல வாய்ப்பு உள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு புறமிருக்க, தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது 5 பிரபலங்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இருந்தாலும் சுவராஸ்யங்கள் கூடிக்கொண்டோ தான் போகிறது.
தமிழ் பிக் பாஸ், தெலுங்கு பிக் பாஸ் எது சிறந்தது என்று பட்டிமன்றமே நடத்தலாம். பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் வரும் சிவகாமி கெட்டப்பில் வந்து அசத்துகிறார். ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழி ரசிகர்களையும் கட்டி போடுபவர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது டபுள் தமாக்கா தான் என்று சிலர் சொல்கின்றனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி யாராவது வருவார்களா என்பது தான் அடுத்த கேள்வி.


Click it and Unblock the Notifications











