மிரட்டும் கொரோனா.. தொடரும் ஊரடங்கு.. இந்த வருஷம் பிக்பாஸ் லேட் ஆகுமாமே!
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை மூன்று சீசன்களை கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் தொகுப்பாளர் புதிய பிரபலம் என தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த விஜய் டிவி 4வது சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்குவார் என தெரிவித்தது.

போட்டியாளர் பட்டியல்
இதனிடையே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியளார்கள் என பிரபலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாத இறுதியில் தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது.

இந்தியாவிலும் ஆட்டம்
இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகும் என கூறப்படுகிறது. காரணம்.. கொரோனா வைரஸ் மிரட்டல்.. உலக நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் ஆட்டத்தை காட்டி வருகிறது.

கொரோனா பாதிப்பு
இதனால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

ஊறுதி படுத்தவில்லை
இதன் காரணமாக சென்னையில் இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு தாமதமாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த தகவல் குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications











