வாவ்.. அக்டோபரில் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 5.. கமல் கால்ஷீட் எத்தனை நாள் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இழுக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் ஐந்தையாவது உரிய நேரத்தில் தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டது. இதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது பிக்பாஸ் டீம்.

தொகுப்பாளர் மாற்றம்

தொகுப்பாளர் மாற்றம்

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் முதல் பங்கேற்க போகும் போட்டியாளர் வரை பலரிடமும் நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிசியாக இருந்ததால் பிக்பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

பெரும் தொகை சம்பளம்

பெரும் தொகை சம்பளம்

ஆனால் பிக்பாஸ் சீசன் 5யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப்போகிறார் என அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது. இதற்காக கடந்த சீசன்களை காட்டிலும் பெரும் தொகை அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எப்போது சீசன் 5?

எப்போது சீசன் 5?

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்து வருகிறது.

மீண்டும் சூடுபிடிக்கும் பணி

மீண்டும் சூடுபிடிக்கும் பணி

இதனால் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த லாக்டவுனில் தளவுர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5க்கான பணிகள் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Recommended Video

BB Jodigal Showல Vanithaகு ஜோடியாகும் Pugazh | Bigg Boss, Vanitha Vijaykumar
வரும் அக்டோபர் முதல்

வரும் அக்டோபர் முதல்

மேலும் பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 4ஐ போலவே பிக்பாஸ் சீசன் 5ம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 நாட்கள் கால்ஷீட்

20 நாட்கள் கால்ஷீட்


மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் கமலிடம் 20 நாட்கள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X