லவ் டுடே மெகா ஹிட்.. ஹிந்தியிலும் ரீமேக்காகிறது.. தயாரிப்பாளர் அர்ச்சனா மகிழ்ச்சி ட்வீட்

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் மாபெரும் வெற்றியடைந்த லவ் டுடே படமானது தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து படம் உருவானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தார்கள்.

லவ் டுடேவை இயக்கிய பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடேவை இயக்கிய பிரதீப் ரங்கநாதன்

இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா ஹிட்டான லவ் டுடே படம்

மெகா ஹிட்டான லவ் டுடே படம்

லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதற்கான விழாவும் சமீபத்தில் நடந்தது.

 சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு

இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. இப்படிப்பட்ட சூழலில் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் லண்டன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள், ரஜினிக்காக தயார் செய்திருக்கும் கதையை லைகா நிறுவனத்திடம் கூறுவதற்காகத்தான் பிரதீப் லண்டன் சென்றிருக்கிறார் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே

இப்படி ஒரே படத்தின் மூலம் கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநர் ஆகியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் மெகா ஹிட்டான லவ் டுடே திரைப்படமானது ஹிந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமத்தை பாந்தோம் ஃபிலிம்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

அர்ச்சனா கல்பாத்தியின் ட்வீட்

அர்ச்சனா கல்பாத்தியின் ட்வீட்

இதுகுறித்து அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், " பாந்தோம் ஃப்லிம்ஸுடன் இணைந்து லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சுவாரஸ்யமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து இந்தப் படத்தை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு காத்திருக்க முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X