Pongal 2026 Box Office - பராசக்தி, வா வாத்தியார் பாக்ஸ் ஆஃபிஸுக்கு டஃப் கொடுக்கும் தலைவர் தம்பி தலைமையில்

சென்னை: தமிழ் சினிமாவில் 2026ஆம் ஆண்டு பொங்கல் ஜனநாயகன் படத்துக்கும், பராசக்திக்கும் இடையே போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் ரேஸிலிருந்து விலகிக்கொள்ள பராசக்தி மட்டும் பத்தாம் தேதி சோலோ ரிலீஸ் ஆனது. தொடர்ந்து 14ஆம் தேதி வா வாத்தியாரும், 15ஆம் தேதி தலைவர் தம்பி தலைமையில் படங்களும் வந்தன. எனவே இந்த வருட தொடக்க பாக்ஸ் ஆஃபிஸ் இந்த மூன்று படங்களுக்கு இடையே போட்டியை சந்தித்திருக்கிறது.

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி பத்தாம் தேதியும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக பொங்கல் ரேஸிலிருந்து அப்படம் வெளியேறிவிட்டது. பராசக்தியோ வந்த சிக்கல்கள் எல்லாத்தையும் சமாளித்து அறிவித்தபடியே பத்தாம் தேதி ரிலீஸானது.

இரண்டு படங்கள்: ஜனநாயகன் வெளியேறியதால் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி மட்டும் சோலோ ரிலீஸாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் ட்விஸ்ட்டாக கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் ஜனவரி 14ஆம் தேதியும், ஜீவா நடிப்பில் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதியும் தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாகின.

Tamil Box Office Pongal Clash Parasakthi Leads Jiiva s Thalaivar Thambi Thalaimaiyil Gains Momentum
Photo Credit:

வா வாத்தியார் சுமார்: கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் உருவான வா வாத்தியார் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஃபேண்டஸி மற்றும் சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் நலனின் ஸ்டைலிலேயே இல்லை என நொந்துகொண்டார்கள் ரசிகர்கள். கார்த்தியின் நடிப்பு மட்டும்தான் ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்தது; அதுவும் ஒருகட்டத்துக்கு மேல் பயங்கரமாக இரிட்டேட் செய்துவிட்டது என ரசிகர்கள் புலம்பி தள்ளினார்கள்.

தலைவர் தம்பி தலைமையில் சூப்பர்: அதேசமயம் ஜீவா - நிதிஷ் கூட்டணியில் உருவான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் சூப்பர் வரவேற்பை பெற்றது. மலையாள ஸ்டைலில் ஒரு ஃபீல் குட் படமாகவும், வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படமாகவும் அது அமைந்துவிட்டது. தமிழ் சினிமாவில் நிதிஷ் முதல் படத்திலேயே தனது தடத்தை ஆழமாக பதித்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தியேட்டர்களிலும் கூட்டங்கள் கூட ஆரம்பித்துவிட்டன.

வசூல் விவரம்: பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தை பொறுத்தவரை பத்தாம் தேதி வெளியான பராசக்தி இதுவரை இந்தியாவில் 41 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. வா வாத்தியாரோ மூன்று நாட்களில் 5.2 கோடி ரூபாயை இந்தியாவில் வசூலித்திருக்கிறதாக தெரிகிறது. தலைவர் தம்பி தலைமையில் படமோ முதல் நாளில் 1.4 கோடி ரூபாயும், இரண்டாவது நாளான நேற்று 2.5 கோடியும் வசூலித்து மொத்தம் இரண்டு நாட்களில் 3.9 கோடி ரூபாய் அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது.

டஃப் கொடுக்கும் ஜீவா: ஜீவாவின் படத்துக்கு நாளுக்கு நாள் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே பராசக்தி, வா வாத்தியார் படத்தில் ஏமாற்றமடைந்த கூட்டத்தினர் எல்லாம் தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் நேற்றைய வசூல் அதிகரிப்பு என கருதப்படுகிறது. கண்டிப்பாக இன்று நாளைக்குள் வா வாத்தியார் வசூலை இப்படம் முந்திவிடும். பராசக்தியை முந்துவது கடினம்தான் தலைவர் தம்பி தலைமையில் படத்தால் பராசக்தி வசூல் டல்லடிக்க ஆரமித்திருப்பது உறுதி.

More from Filmibeat

Read more about: pongal 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X