மராத்தியில் ராப் பாடி பொளந்து கட்டிய தமிழ்ப் பசங்க: வீடியோ வெளியிட்ட நவீன்

By Siva

சென்னை: தமிழ்ப் பசங்க பாடிய மராத்தி ராப் பாடல் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் நவீன்.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டானது. இந்நிலையில் மூடர்கூடம் படம் புகழ் இயக்குநரும், நடிகருமான நவீன் போட்டுள்ள ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tamil boys rap song in Marathi

நவீன் வீடியோ ஒன்றை வெளியிட்டு ட்வீட்டியிருப்பதாவது,

நம்ம திருநெல்வேலி பசங்க மும்பைக்கு போயி, மராத்தி கத்துகினு, பட்டாசா ஒரு ராப் பாட்டு மராத்திலயே பாடிருக்கானுவ. ஆடியோ வீடியோ ரெண்டும் மெர்சலா இருக்கு. இது அனைத்து இந்தி பிராச்சாரசபா மாமிக்கள், மாமாக்களுக்கு என்று தெரிவித்துள்ளார்.
#MeNavtho
#TNAgainstHindiImposition

நவீனின் ட்வீட்டை பார்த்தவர்கள் அந்த நெல்லை பசங்களின் முயற்சியை பாராட்டியுள்ளார்கள். சிலரோ அது என்ன சார் மாமாக்கள், மாமிக்கள் தான் இந்தி திணிப்பை செய்கிறார்களா, அவர்களை எதற்காக தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மாமா, மாமிக்கள் யார் கல்விக்கும் தடையாக இருக்கவில்லை. அதனால் கஷ்டப்பட்டாலும் உழைத்து முன்னேறப் பார்ப்போம். அடுத்தவர்களை குறை சொல்லாமல் இருப்போம் என்று சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சிலரோ, நவீன் சார் பங்கம் செய்துவிட்டார். ஒரு ட்வீட் போட்டாலும் நெத்தியடி கொடுத்துள்ளார், அருமை என்று பாராட்டியுள்ளனர். நெல்லையை சேர்ந்தவர்கள் 60களில் மகாராஷ்டிராவுக்கு சென்று வியாபாரம் செய்தார்கள். அதனால் 80கள் வரை அவர்கள் மராத்தி, இந்தியில் பொளந்து கட்டுவார்கள் என்று சில நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

தமிழக மக்கள் இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. அந்த மொழியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம் என்று தமிழர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நவீன் வெளியிட்டுள்ள வீடியோ தமிழர்கள் மராத்தியை கற்பதிலும் ஆர்வமாக உள்ளனர். எதுவாக இருந்தாலும் கற்பதில் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை, திணித்தால் தான் பிரச்சனை என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்பை அடுத்து நீட் தேர்வு முடிவுகள் குறித்து ட்வீட் செய்து வருகிறார் நவீன். மேலும் அது தொடர்பான ட்வீட்டுகளை ரீட்வீட்டும் செய்து கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X