பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன்.. பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை : மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. கண்டிப்பாக படம் விக்ரம் படத்தை தொடர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி இன்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. வெறுமனே 155 நாட்களில் இரண்டு பாங்களையும் எடுத்து முடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் மணிரத்னம்.

ஸ்கோர் செய்த கார்த்தி

ஸ்கோர் செய்த கார்த்தி

கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கேரக்டரில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். விக்ரம், ராவணன் படத்தின் கேரக்டரை அதிகமான இடங்களில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கதையின் ஹீரோவான ஜெயம்ரவிக்கு காட்சிகள் குறைவு என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

ஏற்கனவே மணிரத்னம் தன்னுடைய படங்களின்மூலம் சர்வதேச அளவில் தனக்கான சிறப்பான இடத்தை அடைந்துள்ள நிலையில், இந்தப் படம் மேலும் அவருக்கு உயர்வை கூட்டியுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படைப்பை மணிரத்னத்தின் மேஜிக்கில் பார்க்க தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும், இந்தப் படம் இந்திய அளவில் வரலாற்று சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளார். படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ்சிவன் பாராட்டு

இயக்குநர் விக்னேஷ்சிவன் பாராட்டு

பெரிய அளவிலான ஜாம்பவான்களால்தான் வரலாறு உருவாக்கப்படுவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இந்தப் படத்தின்மூலம் பெருமை அடையலாம் என்றும் திரையரங்குகளில் சென்று இந்த அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து

அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியன் செல்வன் படத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதுபோன்ற சிறப்பான படத்தை கொடுத்த மணிரத்னத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், படம் பாக்ஸ் ஆபீசில் பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கவும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

கௌதம் கார்த்திக் பாராட்டு

கௌதம் கார்த்திக் பாராட்டு

இதனிடையே தமிழ் சினிமாவின் கனவு பிராஜெக்டான பொன்னியின் செல்வன் தற்போது வெளியாகியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கௌதம் கார்த்திக், தன்னுடைய குரு மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். படம் வரலாற்று சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளார்.

வரலட்சுமி சரத்மார் வாழ்த்து

வரலட்சுமி சரத்மார் வாழ்த்து

இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான், தன்னுடைய தந்தை சரத்குமார், த்ரிஷா, ஜெயம்ரவி உள்ளிட்டவர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற தன்னுடைய டார்லிங்குகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X