twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்விட்டரில் குவியும் சினிமா பிரபலங்களின் சுதந்திர தின வாழ்த்துகள்!

    By Mathi
    |

    சென்னை: சினிமா பிரபலங்கள் பலரும் இப்போது ட்விட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இன்றைய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளையும் ட்விட்டர் மூலமாக தெரிவித்து தங்களது 'சமூக அக்கறை'யை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    சினிமா நடிகர், நடிகைகளுக்கு வெளி உலகம் தெரியாது என்ற பொதுக் குற்றச்சாட்டுகள் காலம் கடந்த ஒன்றாகிவிட்டது.. மக்களின் பிரச்சனைகளின் கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் சினிமா பிரபலங்கள் முன்னைவிட இப்போது முனைப்புடன் இருக்கின்றனர்.

    அதுவும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் விஸ்வரூப வளர்ச்சியில் தங்களையும் இணைத்துக் கொண்டு சினிமா பிரபலங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இன்றைய சுதந்திர தின நாளில் ட்விட்டரில் ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்

    ஹன்சிகா

    ஹன்சிகா

    ட்விட்டரில் சீக்கிரமாகவே சுதந்திர தின வாழ்த்துச் சொல்லிவிட்டார் ஹன்சிகா.. "Happy Independence days . Proud to be an Indian . Jai hind" இதுதான் அவரது வாழ்த்து..

    அபிஷேக் பச்சான்

    அபிஷேக் பச்சான்

    பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சான் "Happy Independence Day! Vande Mataram" என்று பதிவிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    குஷ்பு

    குஷ்பு

    இந்த வரிசையில் நம்ம குஷ்புவும் கொஞ்ச நீளமாகவே பதிவிட்டிருக்கிறார்.. In these times,d only thing tat is free of cost is advise..n ppl give in abundant..thanks but no thanks..pls understand d issues 1st.. :) But again,as we celebrate r Independence,let's celebrate democracy too..I alwz say "u can be opinionated but not judgmental..".enjoy ur day!

    ஏ.ஆர். ரஹ்மான்

    ஏ.ஆர். ரஹ்மான்

    இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்தியர்களுக்கு தமது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.. ரஹ்மானின் வாழ்த்து இது 'My fellow Indians, wish you a very happy Independence Day. Jagaao Mere Des Ko...'

    சிபிராஜ்

    சிபிராஜ்

    நடிகர் சிபிராஜ் நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது சிபியின் வாழ்த்து "Happy Independence day friends...#jaihind"

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    இளம் நடிகர் சிவகார்த்திகேயனும் தம் பங்குக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இது அவரது வாழ்த்து 'Happy Independence Day.. Proud to be an Indian:)'

    இப்படி ஏராளமான சினி பிரபலங்கள் ட்விட்டரில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tamil Cine Celebrities wishes for ID through their Twitter pages to their fans and Indians.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X