நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் சரத்குமார்

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள பையனூரில் 7 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என்ற சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
அந்த சங்கத்தின் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக ராதாரவி, செயலாளராக வாகை சந்திரசேகர், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜ், இயக்குனர்களாக பூச்சி முருகன், எம்.என்.கே.நடேசன், நளினி, பாத்திமாபாபு, சீதா, பெஞ்சமின், கானா உலகநாதன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
சங்கத்தின் பெயர் பலகையை, நடிகர் சங்க வளாகத்தில் சரத்குமார் நேற்று காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பையனூரில் வீடுகள் கட்ட 7 ஏக்கர் நிலம் வழங்கியதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும், நடிகர்களுக்காக வழங்கிய இடத்தில் அடுக்கு மாடி கட்ட திறமையான கட்டிட வல்லுனர்கள் குழுவினை அமைத்து, அவர்களின் ஆலோசனை அடிப்படையில் வீடுகள் கட்டுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











