வாயாடி பெத்தப் புள்ளையுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுவோமா?
சென்னை: உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்பாக்களின் இளவரசிகளாக வலம் வரும் மகள்களுக்கு இன்று சிறப்பான நாள். தமிழ் சினிமாவில் அப்பா, மகள் பாசத்தை எடுத்துரைக்கும் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.
இந்த நல்ல நாளில் அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்.
சிவகார்த்திகேயன்
அருண் ராஜா காமராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கனா படத்தை தயாரிப்பதுடன் தனது செல்ல மகள் ஆராதனாவுடன் சேர்ந்து வாயாடி பெத்தப் புள்ள என்ற பாடலை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோவை பார்த்து உருகாத அப்பாக்கள் இருக்க முடியாது.
ராம்
அப்பா, மகள் என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பாடலாக தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் மாறியுள்ளது. மறக்க முடியுமா?
அஜித்
என்னை அறிந்தால் படத்தில் மகள் ஈஷாவுக்காக அப்பா அஜித் பாடிய உனக்கென்ன வேணும் சொல்லு பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது, வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்தாலும் போர் அடிக்காது.
விக்ரம்
தெய்வத் திருமகள் படத்தில் வரும் ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாடு பாடல் எவர்கிரீன் பாடல்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது என்றே கூற வேண்டும்.
பிரகாஷ்ராஜ்
அபியும், நானும் படத்தை பார்த்து பொறாமைப்படாத மகள்களே இருக்க முடியாது. வா வா என் தேவதையே பாடல் அனைத்து மகள்களுக்கும் பிடித்து போன பாட்டு.


Click it and Unblock the Notifications











