நல்ல கேரக்டர் வேண்டும் என்று அன்புடன் கேட்டுவிட்டு போனாயே.. நிதிஷ் வீரா மரணம்.. உருகும் பிரபலங்கள்!

சென்னை: நடிகர் நிதிஷின் வீராவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Asuran Pudhupettai நடிகர் Nitish Veera கொரோனாவால் உயிரிழப்பு | #RIPNitishVeera

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று காலமானார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் வீரா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐயோ தம்பி நிதிஷ்

ஐயோ தம்பி நிதிஷ்

இயக்குநர் பெ விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில், புது கார் வாங்கிவிட்டேன் அண்ணா என்று எனது அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் பேசினோம். . எனக்கு நல்ல கேரக்டர் கொடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டு விட்டு போனாயே.....ஐயோ தம்பி நிதிஷ்... தினம் தினம் கொடுமைகள் வேதனைகள் தொடர்கிறது.. என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நண்பா மனம் கனக்கிறது

நண்பா மனம் கனக்கிறது

இதேபோல் நடிகர் காளி வெங்கட் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், சினிமா மீதான ஆவலும் அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவரிடமும் கண்டதில்லை, வருவாய் மீண்டும் உன்னை கேலி செய்ய வேண்டும் என கார்த்தியும் நானும் காத்திருந்தோம், நம்ப முடியவில்லை நண்பா மனம் கனக்கிறது.. என குறிப்பிட்டுள்ளார்.

மை

மை "மணி"...

இதேபோல் இயக்குநர் செல்வராகவனும் நடிகர் நிதிஷ் வீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ரெஸ்ட் இன் பீஸ் மை "மணி".. என குறிப்பிட்டுள்ளார்.

அழகான நாட்கள்

அழகான நாட்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள டிவிட்டில் காலா படத்தில் உங்களுடனான என்னுடைய பயணம் ரொம்பவே அழகானது. கடின உழைப்பாளியான நடிகர், அடித்தளமாக இருந்தீர்கள்.. உங்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நீங்கள் மிஸ் பண்ண படுவீர்கள் என பதிவிட்டுள்ளார்.

எழுதவே வலிக்கிறது

எழுதவே வலிக்கிறது

நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், இதை எழுதவே வலிக்கிறது. வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் அவருடன் நடித்துள்ளேன். இந்த கொரோனா இரண்டாவது அலை பல உயிர்களை பறித்து செல்கிறது. கவனமாக இருங்கள் உங்கள் அன்புக்குரியவர்களை நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

2 படங்களில் நடித்துள்ளோம்

2 படங்களில் நடித்துள்ளோம்

நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், ரெஸ்ட் இன் பீஸ் என் நண்பா நிதிஷ் வீரா. நாம் கழுகு மற்றும் பெல் பாட்டம் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளோம். மிகவும் ஆர்வமான நடிகர்.. கனிவான ஆன்மா.. இரண்டாவது அலை ஜோக் அல்ல நண்பர்களே.. இனி யாரையும் இழக்க முடியாது.. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

துயரமான விஷயம்

துயரமான விஷயம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரர் நிதிஷ் வீரா. மிகவும் துயரமான விஷயம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X