மோசமான துயரம்.. கொரோனாவுக்கு இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா.. பதறும் பிரபலங்கள்!

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Recommended Video

Arunraja மனைவிக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய SK, Udhayanidhi | #RIPSindhuja

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர், பாடகர் என பலமுகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். பல படங்களில் நடித்துள்ள இவர், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ஆர்ட்டிக்கிள் 15

ஆர்ட்டிக்கிள் 15

மேலும் பல பாடல்களை எழுதியுள்ள அருண்ராஜா காமராஜ் தனது குரலில் பல ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். தற்போது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மனைவி மரணம்

மனைவி மரணம்

இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அருண்ராஜாவுக்கு சிகிச்சை

அருண்ராஜாவுக்கு சிகிச்சை

அருண்ராஜா காமராஜும் சிந்துராஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே அருண்ராஜா காமராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அருண்ராஜா காமராஜின் மனைவியின் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யாருக்கும் நடக்கலாம்

யாருக்கும் நடக்கலாம்

நடிகை பிரியா பவானிசங்கர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகவும் வருத்தமளிக்கிறது. புறப்படும் ஒவ்வொரு வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி என்னவென்றால், அது யாருக்கும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், எங்கள் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், யாருக்கு வேண்டுமானாலும்! தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்.

இது ஒருபோதும் நடக்ககூடாது என்று நான் விரும்புகிறேன். அருண்ராஜா காமராஜுக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுக்க கடவுளை மனதார பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அய்யோடா.. என்ன இது..

அய்யோடா.. என்ன இது..

நடிகரும் இயக்குநருமான மனோ பாலாவும் அருண்ராஜா காமராஜின் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிந்துஜா மரணமடைந்த தகவலை ஷேர் செய்துள்ள அவர், அய்யோடா.. என்ன இது... என பதிவிட்டுள்ளார்.

தைரியமா இருங்க..

தைரியமா இருங்க..


இதேபோல் இயக்குநர் சேரனும் அருண்ராஜா காமராஜின் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் ஆழ்ந்த இரங்கல்கள் .... தைரியமாக இருங்க அருண்ராஜா காமராஜ் என குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிரம் போயிட்டீங்க

சீக்கிரம் போயிட்டீங்க


நடிகர் சாந்தனு பாக்கியராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், வாழ்க்கை எப்படி போக வேண்டும் என்பது இதுவல்ல. அவரை சில மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். அவருடைய கணவர் எங்களுடன் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை பார்க்க வந்தார். ரொம்ப சீக்கிரம் போயிட்டிங்க சிந்து. உங்களின் இழப்புக்கு வருத்தப்படுகிறேன் அருண்ராஜா காமராஜ் என குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப வருந்துகிறேன்

ரொம்ப வருந்துகிறேன்


நடிகர் சிபிராஜ் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் அருண்ராஜா காமராஜ் புரோ மற்றம் அவருடைய குடும்பத்திற்கும். உங்களுடைய இழப்புக்கு ரொம்பவே வருந்துகிறேன். தைரியமாக இருங்கள் சகோதரா.. என குறிப்பிட்டுள்ளார்.

மோசாமான துயரம்

மோசாமான துயரம்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள டிவிட்டில், வெற்றியை மாலையாக சூடிக் கொள்ளும்போது மிக நேர்மையாக மகிழ்வது இணையாள் மட்டுமே.

அருண்ராஜா காமராஜ் உங்களின் அடுத்தகட்ட நகர்வைப் பார்த்து ரசிக்க இயலாமல், அவர்கள் கடந்து போய்விட்ட துயரம் எவ்வளவு மோசமானதென அறிவேன். மீண்டு வர இறைவன் பலத்தை தரட்டும். ஆறுதல்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உடைந்த இதயங்கள்

உடைந்த இதயங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், சிந்து என குறிப்பிட்டு உடைந்த இதயங்களின் ஈமோஜிகளை ஷேர் செய்துள்ளார்.

மிக நல்ல ஜோடி

மிக நல்ல ஜோடி

நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவர்கள் காதலிக்கும் பொழுதிலிருந்தே நல்ல பழக்கம். மிக நல்ல பெண்... மிக நல்ல ஜோடி... ஈடு செய்ய முடியாத இழப்பு அருண்ராஜா. தைரியமாக இருங்கள்.. மிஸ் யூ சிஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.

தாங்க முடியாத இழப்பு

தாங்க முடியாத இழப்பு

இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆன்மா சாந்தியடையட்டும் சிந்து. ஆழ்ந்த இரங்கல் அருண்ராஜா காமராஜ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்த தாங்க முடியாத இழப்பை தாங்கிக்கொள்ள கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X