என்ன இது.. என்ன நடக்குது.. இதயமே உடைந்துவிட்டது இளம் இயக்குநர் அகால மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னை: இளம் இயக்குநர் அருண் பிரசாத்தின் திடீர் மரணத்திற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Director Shankar AD Varun Prasath No more | ஐ Assistant Director

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இளம் நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். ஒன்றரை வயது குழந்தையையும் இளம் மனைவியையும் அவர் தவிக்கவிட்டு சென்றது தமிழ் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இளம் இயக்குநரான வெங்கட் பக்கர் என்கிற அருண் பிரசாத் மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கி பலியாகியிருக்கிறார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் பிரசாத், ஜிவி பிரகாஷை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்கியிக்கிறார்.

நடிகர் மனோ பாலா

நடிகர் மனோ பாலா

அந்தப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இயக்குநர் அருண் பிரசாத் இன்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான மனோபாலா பதிவிட்டுள்ள டிவிட்டில் என்ன இது.. என்ன நடக்குது.. ஆன்மா சாந்தியடையட்டும் என அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இளம் இயக்குநரும் என்னுடைய முன்னாள் உதவி இயக்குநருமான அருண் இறந்த செய்தியை கேட்டு இதயமே உடைந்துவிட்டது. நீ எப்போதும் இனிமையாகவும், பாஸிட்டிவாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்தாய். உனக்காக என்னுடைய பிரார்த்தனைகள் உன் குடும்பத்தாருக்கும் உன் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ்

இதேபோல் நடிகர் ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்...
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன் பதிவிட்டிருக்கும் டிவிட்டில் வருத்தமாக இருக்கிறது.. அவரது திரைப்படம் வெளியாகி வெற்றிவாகை சூடி அவர் அத்மா சாந்தியடையட்டும்.. என தெரிவித்துள்ளார். இதேபோல் பிரபலங்கள் பலரும் அருண் பிரசாத்தின் மறைவுக் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X