twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்னர் வீரம் வாளடி.. இந்த மண்ணின் தொன்மை கீழடி.. தமிழன்டா என கெத்து காட்டும் விவேக்ஸ்..!

    கீழடி தமிழர் நாகரிகம் குறித்து நடிகர்கள் விவேக், டேனி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    |

    சென்னை: கீழடி தமிழர் நாகரிகம் குறித்து தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    தடைகள் மற்றும் இன்னல்களால் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் பிரச்சினை ஏற்பட்டது. பல்வேறு போராட்டங்களின் காரணமாக இப்போது இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    முதல்கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்களின் மூலம் கீழடி நாகரிகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என்று தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழர் நாகரிகம் தொடர்பாக ஆய்வுகளில் மிகப்பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

    ஒத்த செருப்பு சைஸ் 7... போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்ஒத்த செருப்பு சைஸ் 7... போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்

    டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    தமிழர்கள் இந்த தருணத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் சங்க காலம் குறித்த மதிப்பீடுகளிலும் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மக்கள், டிவிட்டரில் #keezhadiதமிழ்civilisationwe எனும் ஹேஷ்டேஷ் போட்டு, அதனை டிரெண்டாக்கியுள்ளனர்.

    நடிகர் விவேக்கின் கவிதை

    நடிகர் விவேக் கீழடி குறித்து ஒரு கவிதை எழுதி, அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மன்னர் வீரம் வாளடி;இந்த மண்ணின் தொன்மை கீழடி! என்றும் வணங்கும் ஈரடி..அது எங்கள் திருக்குறள் பாரடி! பண்டைத்தமிழன் தோளடி; அதன் வன்மை திண்மை பேரிடி! தங்கத் தமிழ்த்தாய் காலடி; அதைத் தழுவிடும் பேரினம் நானடி!", என குறிப்பிட்டுள்ளார்.

    தமிழன்டா எந்நாளும்

    பாடலாசிரியர் விவேக் தனது பதிவில், "தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காத்தோட கலந்தாலும் அது தான் என் அடையாளம்", என கவிதை எழுதியுள்ளார். விவேக்கின் இந்த வரிகளை விஜய் ரசிகர்கள் தங்களுடைய பதிவுகளில் பகிர்ந்து வருகின்றனர்.

    டேனியின் சந்தேகம்

    "2600 வருடங்களுக்கு முன்னர் ஒரு நகரம். இதுவரை கிடைக்கப்பெற்ற 5000க்கும் அதிகமான பொருட்கள் எதிலும் மதத்துக்கான அடையாளம் இல்லை. மிகத் தொன்மையான நாகரிகத்தில் எந்த ஆதாரமும் இல்லை", என நடிகர் டேனி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் பலரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    The hashtag #keezhadiதமிழ்civilisationwe is trending in twitter. Tamil cinema celebrities like actor Vivek, lyricist Vivek joined the moment with their valuable sharing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X