கம்பீரமான தொனி.. நல்ல உள்ளம்.. சிந்தனையாளர்.. நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்ட வெங்கட் சுபா கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானார்.

நடிகர் பார்த்திபன், இயக்குநர் நவீன், சனம் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா ரசிகர்களும் நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

நண்பர் வெங்கட்

நண்பர் வெங்கட்

"கம்பீரமான தொனியுடன்,அதிகார தோரணையுடன் அவர் வலம் வரும் அழகே தனி!ஒத்த செருப்பு-காக 24 மணிநேர விமர்சனம் செய்த நட்பை என்னவென்று சொல்வது?மனைவி மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?இனி என்ன செய்ய வேண்டும்? நண்பர்கள் அனைவரும் அவரது மகன் இத்துறையில் முன்னேற உதவ வேண்டும். அதுவே..." என நடிகர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நவீன் இரங்கல்

நவீன் இரங்கல்

"என் நலனில் அக்கறை கொண்ட நல்ல நண்பர், சினிமாவில் பல வருட அனுபவசாலி சுபா வெங்கட் சார் நேற்று இரவு கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் நம்மைவிட்டு பிரிந்தார். என் தயாரிப்பாளர் டி சிவா சாரின் 37வருட நெருங்கிய நண்பர். சிவா சாருக்கும், வெங்கட் சார் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!" என மூடர்கூடம் இயக்குநர் நவீன் பதிவிட்டுள்ளார்.

சனம் ஷெட்டி இரங்கல்

சனம் ஷெட்டி இரங்கல்

மிகவும் வருத்தமாக இருக்கிறது. வெங்கட் சுபா சாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நட்டி நடராஜ் இரங்கல்

நட்டி நடராஜ் இரங்கல்

இது இதயத்தை பிளக்கும் செய்தியாக உள்ளது. நல்ல மனிதர் சுபா வெங்கட் சார் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரிழப்பு

பேரிழப்பு

இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், பன்முகத்தன்மை கொண்ட நடிகர் வெங்கட் சுபாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், தனது வல்லினம் படத்திற்கு அவர் அளித்த பாராட்டு இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X