சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. 40வது பிறந்த நாளை கொண்டாடும் தல தோனி.. வாழ்த்தும் சினிமா பிரபலங்கள்!

சென்னை: ராஞ்சியில் பிறந்த சிங்கம் தனது சரியான ரயிலை பிடித்து கிரிக்கெட் ஊருக்குள் நுழைந்து ஹெலிகாப்டர் சிக்சர்களை விளாசிய தல தோனியின் 40வது பிறந்தநாள் இன்று.

Recommended Video

Dhoniக்காக வந்த Fans! Practice Matchல் Last Captaincy; ஆடிப்போன England | OneIndia Tamil

சாமானிய மக்கள் மட்டுமல்ல சினிமா பிரபலங்களும் இவருக்கு ரசிகர்கள் தான்.

நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கத்துக்கு பெரிய விசில் அடித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை யாரெல்லாம் சொல்லியிருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்.

ஹேப்பி பர்த்டே தல

ஹேப்பி பர்த்டே தல

1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ராஞ்சியில் பான் சிங் மற்றும் தேவகி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. கடும் போராட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தோனி, விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக கலக்கி பின்னர் இந்திய அணிக்கே கேப்டன் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்பவும் கேப்டனாக இருக்கும் தல தோனி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வாழ்த்துக்கள்!

ஆத்மிகா வாழ்த்து

ஆத்மிகா வாழ்த்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் கலக்கி வரும் எம்.எஸ். தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்தை நடிகை ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான தோனியின் போட்டோவை ஷேர் செய்து ஹேப்பி பர்த்டே கேப்டன் கூல் என வாழ்த்தி உள்ளார்.

வரலக்‌ஷ்மி வாழ்த்து

வரலக்‌ஷ்மி வாழ்த்து

மகேந்திர சிங் தோனியின் மிகப்பெரிய ஃபேன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் தோனியின் புகழை எப்போதுமே பாடிக் கொண்டிருக்கும் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். பார்க்காத மக்களும் விரும்பி நேசிக்கும் ஒரு பெயர் தான் தல தோனி என வாழ்த்தி உள்ளார்.

ஆல் டைம் ஃபேவரைட்

ஆல் டைம் ஃபேவரைட்

யூடியூப் பிரபலம் மதன் கெளரி இது தான் தோனியின் ஆல் டைம் ஃபேவரைட் தருணம் எனக்கு என்று தோனியின் எபிக் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். தனது ரசிகர்களிடம் உங்களின் ஃபேவரைட்டான தருணம் எது எனக் கேட்க பலரும் போட்டோக்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். தோனியின் எல்லா தருணமும் தரமான சம்பவம் தானே!

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதராக நடிகர் விஜய் நியமிக்கப்பட்ட நிலையில், தல தோனியிடம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. விஜய் ரசிகர்கள் தல தோனியின் பிறந்தநாளுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X