twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு இல்லாத கேப்பில் கிடா வெட்டும் காமெடியன்கள்!

    By Shankar
    |

    சூப்பர் காமெடியன்கள் என்று இன்றைக்கு தமிழ் சினிமாவில் யாருமே இல்லை. உச்சத்திலிருந்த வடிவேலு ஒதுங்கியிருப்பதால், பத்தோடு பதினொன்றாக இருந்தவர்கள் இன்று தனி ஆவர்த்தனம் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வடிவேலு திரும்ப வருவதாகக் கூறிக் கொண்டிருக்கும் சூழலில், இப்போதைய காமெடிக் களம் எப்படியிருக்கிறது... ஒரு பார்வை!

    கவுண்டர் காலம்...

    கவுண்டர் காலம்...

    கவுண்டமணி - செந்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களின் படங்களிலேயே தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் வடிவேலு. சில படங்கள் சேர்ந்து நடித்தார். ஆனால் பின்னர் கவுண்டருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகி தனியாக நடிக்க ஆரம்பித்தார்.

    வடிவேலு ராஜ்யம்

    வடிவேலு ராஜ்யம்

    அதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வடிவேலு காமெடியில் தினி ராஜாங்கம் நடத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ் ரசிகர்களின் பேச்சு வழக்கே மாறிப் போனது வடிவேலு காமெடியால். அவர் உபயோகித்த முத்திரை வசனங்களை, பேச்சு வழக்கில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். அட அவ்வளவு ஏன்... வடிவேலுவின் காமெடி வசனத்தையே செய்திகளின் தலைப்பாக்கின பத்திரிகைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

    சந்தானத்துக்கு நேரம்...

    சந்தானத்துக்கு நேரம்...

    அரசியல் புயலில் சிக்கி வடிவேலு கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிட, இந்த கேப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் சந்தானம். இன்று அவர்தான் முன்னணி காமெடியன். நாளொன்றுக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம் மனிதர்.

    கவுண்டர் காமெடியின் ஜெராக்ஸ்

    கவுண்டர் காமெடியின் ஜெராக்ஸ்

    கவுண்டரின் வசன உச்சரிப்பு, அதே நக்கல், அதே பாடிலாங்குவேஜ் என அவரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரிதான் சந்தானத்தின் காமெடி ஸ்டைல் உள்ளது. இதை சாதாரண ரசிகர்களே சொல்கிறார்கள்.

    ஆனால் நான் கவுண்டரைக் காப்பியடிக்கவில்லை என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொண்டே, அவர் ஸ்டைலில் காமெடி செய்து வெற்றி கண்டுள்ளார் சந்தானம்.

    கஞ்சா கருப்பு

    கஞ்சா கருப்பு

    இவரது நகைச்சுவை அலாதியானது. முழுக்க முழுக்க மதுரைத் தமிழ். வடிவேலு கோலோச்சிய காலத்திலேயே இவரும் நகைச்சுவையில் நல்ல இடம் பிடித்தாலும், ஒரே மாதிரியான பாணியால் தனக்கான தனி இடத்தை இழந்தார்.

    பரோட்டா சூரி

    பரோட்டா சூரி

    முன்பு விவேக்குக்கு பொருந்திய ஹீரோவின் நண்பன் வேடம் பக்காவாகப் பொருந்துவது பரோட்டா சூரிக்குதான். மிக எளிமையான இவரது பாணி இன்றைக்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக சுந்தரபாண்டியன் இவருக்கு தனி காமெடியன் என்ற புதிய அந்தஸ்தைத் தந்திருக்கிறது.

    என்ன ஆனால் விவேக்...?

    என்ன ஆனால் விவேக்...?

    கவுண்டர், வடிவேலுவுக்கு அடுத்து சிறப்பான காமெடியன் என்று பாராட்டப்பட்ட விவேக், தன் வாய்த் துடுக்கு மற்றும் ஜாதி சாயம் காரணமாக தனது அந்தஸ்தை இழந்தார். வடிவேலு இல்லாத கட்டத்தில் கூட, விவேக்கை அதிகம் பேர் நாடாததற்கு முக்கிய காரணங்கள் இவை.

    மேலும் காமெடி என்பதே மிமிக்ரிதான் என்ற இவரது எண்ணமும், புதுமையற்ற காட்சி உருவாக்கமும் விவேக்கை ஓய்வெடுக்க வைத்துவிட்டன. இவரது நல்ல நகைச்சுவை இடம்பெற்ற சமீபத்திய படங்கள் உத்தமபுத்திரன் மற்றும் சிங்கம். விட்ட இடத்தைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார். பார்க்கலாம்.

    இவர்களைத் தவிர, தம்பி ராமையா, சிங்கம்புலி, சாம்ஸ் போன்றவர்கள் கிச்சுகிச்சு மூட்டினாலும், நகைச்சுவையைத் தாண்டி கேரக்டர் ஆர்டிஸ்டுகளாக மாறிவிட்டனர்.

    English summary
    The absence of Vadivelu paved way to other comedians to dominate the industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X