நக்கல் புடிச்ச பையன்... அமைதிப்படை அமாவாசையை மறக்க முடியுமா? மணிவண்ணன் செய்த தக் லைஃப்!
சென்னை: நமது வாழ்க்கையில் தினசரி நடக்கும் சம்பவங்களை வைத்து தான் மணிவண்ணன் தக் லைஃப் பண்ணியிருப்பாரு. திரைத்துறையை தாண்டி தமிழக அரசியலிலும் மக்களின் வாழ்க்கை முறையிலும் அவரது திரைப்படங்கள் பேச்சு வழக்காக மாறியுள்ளது. குறிப்பாக புடிச்சு வைச்சா சாணியா? புள்ளையாரா? இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டா இரட்டைப்புள்ளை பிறக்குமா? போனை கும்பிடனுமா சாமியை கும்பிடனுமா என இப்படி வில்லங்கமான கேள்விகளை கேட்டு பின்னர் ரகளையுடன் பதில் தருவது மணிவண்ணனால் மட்டுமே முடியும்.
நையாண்டி: கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மணிவண்ணன். வெள்ளி விழா கொண்டாடிய இப்படத்தில் இடம்பெற்ற அருக்காணி கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த கதாப்பாத்திரத்தை வைத்து தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வந்துள்ளன. குறிப்பாக மணிவண்ணன் என்றதும் நம் நினைவுக்கு வருவது கொங்கு பாஷையும், நக்கலும் நையாண்டியுடன் சமகால அரசியலை புட்டு புட்டு வைப்பார். இன்று தக் லைஃப் பலர் கொடுத்தாலும் மணிவண்ணன் ஒரு லெஜண்ட் என பாராட்டை பெற்றுள்ளார். மணிவண்ணனை பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே அவர் உறுதியாக இருந்தார். கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் கூட தண்ணீர் பிரச்னயையும், மொழி பிரச்னையை மேம்போக்காக சொல்லியிருப்பார்.

காதல் கோட்டை: ஆத்திகம் பேசுபவர்களை விட நாத்திகம் பேசுபவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் ஊர்ல, தெருவில் இருக்கும் பெரிசுங்க பேசி கேள்விப்பட்டிருப்போம். அதே மாதிரி காதல் கோட்டை படத்தில் மனுஷன் தரமான சம்பவம் செய்திருப்பார். இந்த படத்தில் அவர் போன் கடை நடத்துபவராக நடித்திருப்பார். அப்போது கடையில் வேலைபார்க்கும் பையன் ஏன் டெலிஃபோனக் கும்பிடுறீங்கனு கேட்பாரு. அதுக்கு மணிவண்ணன் நம்ம கடையோட ஆணிவேரே இந்த டெலிபோன்தான். இதைக் கும்பிடாம வேற எதடா கும்பிடுவனு மணிவண்ணன் கேக்க; அந்தப் பையன் டெலிபோனைப் பார்த்து முருகானு கும்பிடுவான். உடனே, டேய் முருகன் யாரு டெலிபோனைக் கண்டுபிடிச்சவனா சயிண்டிஸ்டுகளை கும்பிடுங்கடா சனியன்புடிச்சவங்களா, என்று ஒரு பெரிய விஷயத்தை அசால்ட்டா சொல்லிட்டு போயிருப்பாரு.
அமைதிப்படை: மணிவண்ணன்- சத்யராஜ் காம்போவில் வந்த படங்கள் எல்லோமே தக் லைஃப் சம்பவங்கள்தான். அமைதிப்படை என்றதும் பிரேமுக்கு பிரேம் வசனங்களை வைத்து தக் லைஃப் போட்டுக்கொண்டே இருக்கலாம். சத்யராஜ் குளத்தில் குளித்து கொண்டு 'குளத்துல குளிச்சாலே மனசுக்கு சந்தோஷமாதான் இருக்குதுப்பானு சத்யராஜ் சொல்லுவாரு. உடனே கூட இருக்குற ஆளுங்க வாழ்க என்று கத்துவாங்க. அதுக்கு மணிவண்ணன் டேய், இதுக்கு ஆமானு சொல்லோணும்டா. தொட்டதுக்கெல்லாம் வாழ்க வாழ்கனு சொல்வது அல்டிமேட்டா இருக்கும். அதற்கு அடுத்த சீனே அண்ட்ராயரை கசக்குறதுக்கு சண்டை போடுறது. சாதிக்கலவரத்தை ஏற்படுத்த டயலாக் எடுத்துக் கொடுக்குறதுனு எல்லா விஷயத்தையும் காட்டி அப்படியே அரசியலை தோல் உரிச்சி தக் லைஃப் பண்ணியிருப்பாரு மணிவண்ணன். ஒருவேளை மணிவண்ணன் உயிரோடு இருந்திருந்தா, அவரோட எந்த டயலாக் இப்போ இருக்குற அரசியல் சூழலுக்கு சரியா இருக்கும்னு உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஆணழகன்: பொதுவாக ஊரில் இருக்கும் பெண்கள் பத்து மாதம் சுமந்து பெத்ததை பெருமையாகவும், கஷ்டப்பட்டதையும் சொல்லி கண்ணீர் விடுவார்கள். அதேபோன்று இப்படத்தில் கே.ஆர்.விஜயா கே.ஆர்.விஜயாவும் மணிவண்ணனிடம் இதே டயலாக்கை படத்துல சொல்லுவாங்க. அப்போது மணிவண்ணன் பத்து மாசம் சுமக்குற கதையவே இன்னும் எத்தனை வருஷத்துக்கு பேசுவீங்க? இந்த உலகத்துல பொறந்த எந்த ஆம்பளையாவது பத்து மாசம் சுமக்க மாட்டேன்னு சொன்னானா? எங்களால சுமக்க முடியலை. அதனால, சுமக்கல. இதெல்லாம் சயின்ஸ். இதுக்கு ஆம்பளைங்க என்ன பண்ன முடியும்னு ஆண்கள் சார்பா ஒரு பதிலை சொல்லி தக் லைஃப் பண்ணியிருப்பாரு.
தோழர் பாண்டியன்: இப்படத்தில் பல சம்பவங்களை சொல்லலாம். ஆனால், ஆற்றங்கரையில் மணிவண்ணனிடம் சத்யராஜ் கல்யாணம் செய்வது எப்படி என்று கேட்கும்போது சாமியை கும்பிட்டா குழந்தை பிறக்குமா என சத்யராஜ் கேட்பார். சாமி எப்படிப்பா குழந்தை கொடுக்கும் என மணிவண்ணன் சொல்வாரு. அதற்கு அப்படிதான் பொண்ணுங்க சொல்றாங்க. புரூடா சாமியாருங்க சில்மிஷம் பன்றதை பொண்ணுங்க வெளியே சொல்ல முடியாது அதனால, பாவம் பொண்ணுங்க சாமி கொடுத்ததுனு சொல்றாங்க என தக் லைஃப் பண்ணிடுவாரு. இப்படி நிறைய விசயங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications











