twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021ம் ஆண்டு பாதி கிணத்தை தாண்டிய தமிழ் சினிமா.. ஆனால் இத்தனை ஃபிளாப் படங்கள் கொடுத்தா எப்படி?

    |

    சென்னை: 2020ம் ஆண்டு தான் மோசமான ஆண்டு என கடந்த ஆண்டு புலம்பியவர்களை 2021ம் ஆண்டு அதற்கு மேல் வச்சு செய்தது.

    அதிலும் குறிப்பாக சினிமா துறையினரை டோட்டலாகவே துவம்சம் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

    தியேட்டர் அதிபர்களை தெருவுக்கே கொண்டு வரும் வேலையை இந்த கொரோனா முக்கிய வேலையாக எடுத்து செய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தால், வெளியான குறைவான படங்களும் வேலைக்கு ஆகாத படங்களாக ரசிகர்களை திருப்தி பண்ண முடியாமல் திணறியது குறித்த அரையாண்டு சினிமா ரிப்போர்ட் குறித்து இங்கே அலசுவோம்.

    என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்.. நெருக்கமானவன்.. உருகும் நடிகர் பசுபதி!<strong><br></strong>என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்.. நெருக்கமானவன்.. உருகும் நடிகர் பசுபதி!

    ஸ்தம்பித்த சினிமா உலகம்

    ஸ்தம்பித்த சினிமா உலகம்

    கொரோனாவால் உலகம் முழுக்க மனிதர்களின் வாழ்க்கை பல வழிகளில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சுய தொழில் செய்பவர்கள் தொடங்கி சினிமாக்காரர்கள் வரை பலரது வாழ்வாதாரத்தையும் கொரோனா பெருமளவில் காலி செய்து விட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தியேட்டர் தொழில் பெருமளவில் முடங்கிப் போயுள்ளது.

    ஒடிடிக்கும் வேட்டு

    ஒடிடிக்கும் வேட்டு

    தியேட்டர்களுக்கு கொரோனா வேட்டு வைத்தால், ஒடிடி தளங்களையும் சில சுமாரான படங்கள் வேட்டையாடி வருகின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜி5 சினிமா, சோனி லைவ் என ஏகப்பட்ட போட்டிகள் அங்கேயும் உருவாகி உள்ள நிலையில், 2021ம் ஆண்டின் அரையாண்டு வரை திரையிலும் ஒடிடி தளங்களிலும் வெளியாகி வெற்றி பெறாத படங்கள் என்ன என்ன என்பது குறித்து இனி பார்ப்போம்.

    மாதவனின் மாறா

    மாதவனின் மாறா

    தனுஷின் மாறன் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு ஆரம்பமே அமேசான் பிரைமில் வெளியான மாதவனின் மாறா எதிர்பார்த்த அளவுக்கு நடிகர் மாதவனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஏற்கனவே வெளியான சைலன்ஸ் படம் சத்தமே இல்லாமல் ஃபிளாப் ஆனதை போலவே மாறாவும் மக்கள் மத்தியில் சோபிக்கவில்லை. இத்தனைக்கும் இந்த படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற சார்லி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயம் ரவியின் பூமி

    ஜெயம் ரவியின் பூமி

    கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயத்தை மையமாக வைத்து வெளியாகும் பூமி என ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த படம் வெளியானது. ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் சரியில்லை என விமர்சகர்கள் வெளுத்து வாங்கியதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை இந்த படம் ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் கிளம்பின. ஜெயம் ரவி ரசிகர்கள் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

    சிம்புவின் ஈஸ்வரன்

    சிம்புவின் ஈஸ்வரன்

    குண்டு எடையை குறைத்து க்யூட்டான ஸ்லிம் சிம்புவாக மாறி ஈஸ்வரன் படத்தின் மூலம் பக்காவான கம்பேக் கொடுப்பார் சிலம்பரசன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமாரான ஒரு படமாகவே ஈஸ்வரன் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசானது. பூமி மற்றும் ஈஸ்வரன் என நடிகை நிதி அகர்வாலின் இரண்டு கோலிவுட் என்ட்ரி படங்களும் புஸ்சாகின.

    விஷாலின் சக்ரா

    விஷாலின் சக்ரா

    விஷாலுக்கு இன்னொரு இரும்புத்திரையாக சக்ரா திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சண்டக்கோழி 2 போல இந்த படமும் சக்சஸை சந்திக்காமல் சறுக்கியது. ரெஜினா கசாண்ட்ராவை வில்லியாக போட்டு கமர்ஷியல் ரீதியாக கொஞ்சம் லாபத்தை பார்த்தாலும் விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெறவில்லை. அடுத்து எனிமி ஏமாற்றாமல் இருந்தால் சரி.

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    ஒடிடி தளங்களில் தான் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி தொல்லைக் கொடுக்கிறது என்று பார்த்தால் நாங்க தியேட்டரிலேயே இந்த குட்டி ஸ்டோரியை ரிலீஸ் செய்கிறோம் என கொஞ்ச நாள் திறந்த தியேட்டர்களையும் நிரந்தரமாக மூட வைத்து விட்டது இந்த குட்டி ஸ்டோரி. விஜய்சேதுபதி, அமலா பால் என பிரபலமான முகங்கள் இருந்தாலும் குட்டி ஸ்டோரி வெற்றியடையவில்லை.

    காடன் காலி

    காடன் காலி

    இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான காடன் திரைப்படம் கதை ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் திரைக்கதையில் ஏற்பட்ட சொதப்பல் மற்றும் பல ஆண்டுகள் கால தாமதம் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை.

    பரமபதம் விளையாட்டு

    பரமபதம் விளையாட்டு

    நடிகை திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு திரைப்படமும் ஒடிடியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு இயக்குநர் உருவாக்கிய உல்டா கதை மக்கள் மத்தியில் வொர்க்கவுட் ஆகவில்லை.

    மலேஷியா டு அம்னீஷியா

    மலேஷியா டு அம்னீஷியா

    மொழி, அபியும் நானும் போன்ற அருமையான படைப்புகளை இயக்கி ரசிகர்களை மகிழ்வித்த இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான காமெடி படத்தில் காமெடியும் இல்லை கதையும் இல்லை என ஒடிடியில் பார்த்தே ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

    தனுசுக்கு தோல்வி

    தனுசுக்கு தோல்வி

    அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஒடிடி தளங்களுக்கு மற்ற நடிகர்கள் வேட்டு வைத்த நிலையில், செம பில்டப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு பேரதிர்ச்சி கொடுத்து ஃபிளாப் ஆனது. கர்ணன் வெற்றியை கொண்டாடிய நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தோல்வியை சந்தித்துள்ளார்.

    3ம் அலை என்ன பண்ணுமோ

    3ம் அலை என்ன பண்ணுமோ

    2021ம் ஆண்டு 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில், மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ், கர்ணன், டெடி, மண்டேலா, சுல்தான், சார்பட்டா பரம்பரை என சில படங்களே வெற்றியை பெற்றுள்ளன. 3ம் அலை வருவது உறுதியானால் இந்த ஆண்டு தியேட்டர்கள் திறப்பு என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர். வலிமை, அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    2021 year also turned again a worst yeart to cinema industry. Very few films only taste success in first half of this year. Here we check out about disaster movie of this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X