twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏன் தமிழ் சினிமாவில் இப்பெல்லாம் யாரும் ரத்தம் கக்கி சாவதில்லை...???

    By Sudha
    |

    சென்னை: ஒரு காலத்தில் தமிழ்ப் படங்களில் காதல் தோல்வியாக இருந்தால் உடனே ஒரு பெரிய சால்வையை எடுத்து உடல் முழுவதும் போட்டுக் கொண்டு, கையில் சிகரெட் அல்லது பைப் வைத்துக் கொண்டு, மனசு நிறைய வலியும், வாய் நிறைய புகையுமாக உலாத்துவார்கள். அதேபோல முக்கியக் காட்சிகளில் வண்டி வண்டியாக ரத்தம் கக்கியும், வாய் நிறைய வசனம் பேசியம் சாவார்கள்- நம்மையும் சாகடிப்பார்கள். கேட்டால் கேன்சர் அப்படிம்பாங்க. நல்லவேளையாக அப்படிப்பட்ட காட்சிகளையும் இப்போது காணோம் படங்களும் நின்று போய் விட்டன.

    ஹாலிவுட்டில் விதம் விதமான டிரெண்டுகளை அவ்வப்போது அறிமுகப்படுத்துவார்கள். அதே போல தமிழ் சினிமாவிலும் புதுப் புது டிரெண்டு வந்தபடிதான் உள்ளது. ஆனால் இது தொழில்நுட்ப ரீதியாக இருப்பதில்லை - பெரும்பாலும்.

    அம்மா சென்டிமென்ட், ஆட்டுக்குட்டி கதை (அதாவது ஆட்டுக்கார அலமேலு போல), அண்ணன் தங்கச்சி கதை, பொள்ளாச்சியை மையமாக வைத்த கதை. காதல் தோல்வி, அடுக்குமொழி டைட்டில் வைப்பது என்று விதம் விதமான டிரெண்டுகளை போட்டுத் தாக்கிய புண்ணியவான்கள் நமது திரையுலகினர்.

    அதில் ஒன்றுதான் இந்த வியாதிகளை வைத்து வந்த தமிழ்ப் படங்கள். வியாதி என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் பூதாகரமாக காட்டி, பேய் பிசாசு போல சித்தரித்து, இது வந்தால் அம்புட்டுத்தான்... நீ செத்தடா மவனே என்பது போல காட்டி பயமுறுத்தி பாடையில் ஏற்றும் அளவுக்கு டெவலப் செய்தவர்கள் நமது சினிமாக்காரர்கள்.

    பெண் தொடர்பால் தொழுநோய் வருமா? .. ராதா கிளப்பிய பீதி

    பெண் தொடர்பால் தொழுநோய் வருமா? .. ராதா கிளப்பிய பீதி

    ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோயை மையமாக வைத்திருப்பார்கள். ஆனால் தொழுநோய் குறித்த தேவையில்லாத பீதியைக் கிளப்பிய படம் இது. தவறான பெண் தொடர்பால் தொழுநோய் வருவது போல இதில் காட்டியிருப்பார்கள். அதற்குப் பதில் பேசாமல் சிபிலிஸ் வருவது போல காட்டியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும். ராதாவுக்கு தோணவில்லை போல.

    இருமி இருமி இருமி....

    இருமி இருமி இருமி....

    பாலும் பழமும் படத்தில் டிபியை வைத்து விளையாடியிருப்பார்கள். அப்பெல்லாம் இந்த டிபி ரொம்ப பயங்கரமான வியாதி போல. படத்துக்குப் பெயர்தான் பாலும் பழமும், ஆனால் படம் முழுக்க ஒரே இருமல்தான். பேசாமல் பாலுடன் சற்று மிளகு கலந்து குடிக்கக் கொடுத்திருந்தால் இருமலாவது குறைந்திருக்கலாம்.

    கேன்சருக்கே கேன்சர் வர வைத்தவர்கள்

    கேன்சருக்கே கேன்சர் வர வைத்தவர்கள்

    ஆனால் தமிழ் சினிமாக்கார்ரகளிடம் சிக்கி அதிக அளவில் சின்னாபின்னமான ஒரே வியாதி இந்த கேன்சர்தான். அதாவது புற்றுநோய்தான். முத்துராமன், கமல்ஹாசன், மோகன், சிவக்குமார் என அந்தக் காலத்து முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் கேன்சர் வந்து போய் விட்டது. சுஹாசினி, நதியா போன்றோரையும் இது விடவில்லை.

    முத்துராமனுக்கு முதல் சால்வை...

    முத்துராமனுக்கு முதல் சால்வை...

    நெஞ்சில் ஓர் அலயம் படத்தில் டைரக்டர் ஸ்ரீதர் ஒரே கவட்டையில் இரண்டு குருவியைப் போட்டுத் தள்ளியிருப்பார். அதாவது முக்கோணக் காதல் கதை மற்றும் கணவருக்கு கேன்சர். இந்த இரண்டையும் வைத்து கதை சொல்லிய விதத்தை அந்தக் காலத்தில் மக்கள் வெகுவாகவே ரசித்தார்கள். ஆனால் இவர்களின் விளையாட்டுக்கு அந்தக் கேன்சரையும் துணைக்கு வைத்துக் கொண்டதுதான் பாவம் பரிதாபம்.

    அட மைக் மோகனின் தத்ரூபம்

    அட மைக் மோகனின் தத்ரூபம்

    பயணங்கள் முடிவதில்லை படம் பார்த்த அத்தனை பேருமே செத்துப் போய்விட்டார்கள்- உணர்ச்சிவசப்பட்டு. அதில் மைக் மோகன் பாதிப் படம் வரை படு ஜாலியாக பாட்டுப் பாடியபடி இருப்பார். பூர்ணிமாவைக் காதலிப்பார். அவரது புண்ணியத்தால் பாட்டுப் பாடும் வாய்ப்பையும் பெறுவார். உச்சத்திற்கு வந்த பின்னர் பூர்ணிமாவைத் தவிர்த்து விடுவார். என்னடான்னு கேட்டா பிளட் கேன்சர் என்று குண்டைப் போடுவார்கள். பிளட் கேன்சர் வந்தால் என்ன,சிகிச்சை எடுத்துக் கொண்டே காதலிக்கலாமே... ஆனால் அதில் காதலையேத் துறந்து விட்டுப் போய் விடுவார் மோகன். பாவம் பூர்ணிமா... இந்த வியாதிப் படத்தில் ஒரே ஒரு மிகப் பெரிய ஆறுதல் 'டாக்டர்' இளையராஜாவின் இன்னிசைதான்.

    கமலையும் விடலையேப்பா காதல் கேன்சர்

    கமலையும் விடலையேப்பா காதல் கேன்சர்

    அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை. காதல் வந்தவர்களுக்கு மட்டுமே கூடவே கேன்சரும் வந்தது அக்காலத்துப் படங்களில். அதேபோன்ற ஒரு காதல் கேன்சரில் சிக்கிக கமல்ஹாசனும் படாதபாடு பட்டார் வாழ்வே மாயம் படத்தில். ஸ்ரீதேவியை விரட்டி விரட்டிக் காதலிப்பார். ஆனால் ஸ்ரீதேவி கண்டுக்கவே மாட்டார். ஒரு வழியாக கமலின் காதல் புரிந்து அவர் நெருங்கி வரும்போது கமல் விலகிப் போவார். ஏன் பாஸ் இப்படின்னு கேட்டா, ஸ்ரீபிரியாவுடன் சேர்ந்து குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி, தனக்கு கேன்சர் வந்திருப்பதை ரத்தம் கக்கி வெளிப்படுத்துவார். படத்தில் அம்பிகாவும் இருப்பார்...ஹீரோயின் எத்தனை இருந்து என்ன புண்ணியம்... கேன்சர் வந்திருச்சே..

    ரொம்ப சோகம் இந்த ஒரு தலை ராகம்

    ரொம்ப சோகம் இந்த ஒரு தலை ராகம்

    இருப்பதிலேயே ரொம்பச் சோகம் இந்த ஒரு தலைராகம்தான். ஆளாளுக்கு சோகமாக திரிவார்கள். இந்தப் படத்திலும் கேன்சர்தான் முக்கியப் பங்காளி. ராஜேந்தர் படம் என்றால் சும்மாவே சோகம் பொங்கிப் பொங்கல் வைக்கும். ஒருதலை ராகத்தில் இது ஓவராக இருக்கும்.

    ஹீரோயின்களையும் சாகடித்தார்களே..

    ஹீரோயின்களையும் சாகடித்தார்களே..

    ஹீரோக்களை மட்டும் கேன்சருக்குக் காவு கொடுக்காமல், ஹீரோயின்களையும் கூட கேன்சருக்கு சாக விட்டார்கள். பாலைவனச் சோலையில் சுஹாசினிக்கு கேன்சர் வந்தது. பாதிப் படம் வரை தத்துவாமாகப் பேசி வரும் சுஹாசினி திடீரென சோகமாகி கடைசியில் செத்துப் போவார். நாம மட்டும் உயிருடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.

    மன வியாதி

    மன வியாதி

    இந்த மன வியாதி இருக்கேஇதையும் விடவில்லை நம்மவர்கள். விதம் விதமான மன வியாதிகளை வைத்து ஏகப்பட்டபடம் எடுத்தார்கள். அதில் அல்டிமேட் மன முதிர்ச்சில்லாதவராக பிரபு நடித்த சின்னத்தம்பி.

    தாலியை வச்சு என்ன விளையாட்டு

    தாலியை வச்சு என்ன விளையாட்டு

    இந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், அண்ணன் சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என ஏகப்பட்ட விளைாட்டு விளையாடியிருப்பார் பி.வாசு. ஆனால் எதிரிகளை முழுவேகத்தில் புரட்டிப் புரட்டிப் போட்டு அடிக்கும் அளவுக்குப் புத்திசாலியான பிரபுவுக்கு தாலி என்றால் என்ன என்று தெரியாமல் போனதுதான் ரொம்பஆச்சரியமான விஷயம்.

    அடிபட்டு ஞாபகம் போய் ஊட்டியில் டேரா

    அடிபட்டு ஞாபகம் போய் ஊட்டியில் டேரா

    அதேபோல தலையில் அடிபட்டு நினைவெல்லாம் போய், தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஊட்டிக்கு ஹீரோயினோடு போய் நினைவு திரும்ப பிராயத்தனப்படம் ஹீரோக்களையும் நாம் நிறையப் பார்த்துள்ளோம். பெரும்பாலும் அது மோகன்,சிவக்குமார் மற்றும் பிரதாப் போத்தனாக இருக்கலாம்.

    பெரிய போர்வையுடன் பாட்டு

    பெரிய போர்வையுடன் பாட்டு

    இதுபோன்ற படங்களில் ஹீரோவுக்கு ஒரு பாட்டு கம்பல்சரியாக தரப்படும். அதாவது பெரிய போர்வையை எடுத்து சால்வை போல சுற்றிக் கொண்டு,மர உச்சியில் தேமேன்னு உட்கார்ந்திருக்கும் காக்காவை வெறித்துப் பார்த்தபடி விட்டேற்றியயாக சோகப் பாட்டு பாடுவது. இந்த மாதிரியான பாட்டுக்களைப் பாடுவதில் மோகனும், சிவக்குமாரும் சூப்பர்.

    ஊசிக்குப் பதில் உருட்டுக்கட்டை

    ஊசிக்குப் பதில் உருட்டுக்கட்டை

    வெறும் வியாதிகளை மட்டும் காட்டாமல் சிகிச்சை முறைகளையும் பரிந்துரைத்தவர்கள் நமது சினிமாக்காரர்கள். அதாவது தலையில் அடிபட்டு நினைவு போய் விட்டால் மறுபடியும் உருட்டுக்கட்டையால் அதே இடத்தில் நொங்கென்று அடித்து மறுபடியும் ஞாபகம் வர வைப்பார்கள். அமெரிக்காவில் கூட இந்த மாதிரி டிரீட்மென்ட்டைப் பார்க்க முடியாது.கோலிவிட்டில் மட்டுமே உண்டு.

    நீ்ங்களும் மல்டிபிள் பெர்சனலாட்டிதான்

    நீ்ங்களும் மல்டிபிள் பெர்சனலாட்டிதான்

    அதேபோலத்தான் இந்த மல்டிபிள் பெர்சனாலாட்டி பிரச்சினை. இதையும் நம்மவர்களள் சினிமாவில் காட்டி விட்டனர். ஒரு வகையில் பார்த்தால் நாமும் கூட இந்தப் பிரச்சினையுடன் கூடியவர்கள்தான். பிறகு தமிழ்ப் படம் பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கிறோம்,பார்த்து முடித்ததும் நார்மலுக்கு வருகிறோம் இல்லையா...

    English summary
    Tamil movies have portrayed many diseases in it. Here is a round up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X