ஆஸ்கர் விருது விழாவன்றும் கூட தமிழ் ரசிகர்களால் நினைவு கூறப்பட்ட பார்த்திபனின் ஒத்த செருப்பு!
Recommended Video
சென்னை: 92வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பல திரைப்படங்கள் விருதுகளை குவித்த நிலையில் அன்றைய நாளும் நடிகர் பார்த்திபனை நினைவு கூர்ந்தனர் ரசிகர்கள்.
என்ன தான் ஆஸ்கர் விருது விழாவை ரசிகர்கள் கண்டு களித்தாலும் தங்களது ரசிகர்கள் விருதை வென்ற உடன் அதனை தங்களது சமுக வலைதள பக்கத்தில் பகிர்ந்தாலும். இந்திய சினிமாவில் தமிழ் திரையுலக ரசிகர்கள் பலர் சோகத்தில் உள்ளனர். கடந்த வருடம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து வெளியான ஒத்த செருப்பு சைஸ் ஏழு திரைப்படம் ஆஸ்கர்க்கு அனுப்பப்பட்டு பின் அந்த ரேசில் இருந்து வெளியேறியது.

பலரும் நம் இந்திய மொழி படங்களுக்கு தகுதி இல்லையா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு தனி நபர் படம் முழுக்க தனியாக நடித்து ஆசியா புக் ஆப் ரேகாட்ஸ் மற்றும் இந்திய புக் ஆப் ரேகாட்ஸ் என்று பல பட்டங்களை பெற்ற திரைப்படம் தான் இந்த ஒத்த செருப்பு.
என்ன தான் பல படங்கள் நாமினேட் ஆனாலும் ஆஸ்கர் விருதுக்கு என்ன தான் தேவை என்று தெரியவில்லை.
இன்று பலரும் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்தை சமூக வலை தளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். பார்த்திபன் போல ஒத்த செருப்பு என்ற ஒரு படத்தை எவராலும் எடுக்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர் அது தான் உண்மையும் கூட.
ஒரு இயக்குனருக்கு ரசிகர்களின் கைதட்டல் மற்றும் அவர்களின் சந்தோஷமே பெரிய விருது தான். அதனை விட பெரிய விருது எது உண்டு. பார்த்திபன் அடுத்து இயக்கி வரும் இரவின் நிழல் சிங்கிள் டேக்கில் எடுக்கபடும் படம். இப்படம் தேசிய விருது பெற்று, அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு செல்ல வேண்டும் என்பது பல ரசிகர்களின் விருப்பம்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு. நேற்றும் கூட பலரும் சமூக வலை தளங்களில் ஒத்த செருப்பு ஆஸ்கருக்கு செல்லாததை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











