ஷங்கரை அடுத்து மணிரத்னமும் ஃபிளாப்.. அடுத்து யாரு ஏ.ஆர். முருகதாஸா? SK வின் மானம் காக்குமா மதராஸி!
சென்னை: தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குநர்கள் காலடி எடுத்துவைத்து தமிழ் சினிமாவின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டோ அல்லது தமிழ் சினிமாவில் பல விஷயங்களை புதுமையாக கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவை உச்சத்துக்கு கொண்டு சென்ற மூத்த இயக்குநர்கள் பலரும் இயக்கத்தில் இருந்து விலகி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே நேரத்தில் சில இயக்குநர்கள் இன்னும் படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியான இயக்குநர்களில் மிகவும் முக்கியமான இயக்குநர்கள் என்றால் ஷங்கர், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம்.
ஆனால் இவர்களில் ஷங்கர் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் மிக மோசமான படங்களைக் கொடுத்து படுதோல்விகள் சந்தித்துள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் இந்தியன் 2 இந்த படம் வணிக ரீதியான வெற்றி தோல்வியை விட விமர்சன ரீதியாகவே மிகவும் மோசமான படமாக அமைந்தது. இன்றைய காலகட்ட ரசிகர்களின் ரசனைக்கு கொஞ்சம் கூட ஒட்டாத வகையில் படம் இருந்ததால் பல தியேட்டர்களில் இரண்டாவது நாளே ஆட்கள் இல்லை. மேலும் படத்தின் கதை திரைக்கதை என மொத்தமும் படு சொதப்பல்.
சொதப்பல் ஷங்கர்: இந்தியன் 2 படம் தான் சொதப்பி விட்டது என்று நினைத்தால் ஷங்கரின் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படம் இந்தியன் 2 படத்தை விட காட்டு மொக்கைப் படமாக இருந்தது. இதில் இந்தியன் 3 படத்தின் பெரும்பான்மையான வேலைகள் முடிந்துவிட்டதால், இந்த படம் என்ன நிலைமையில் உள்ளதோ என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் தான் என்று இருந்த நிலையில் ஷங்கரின் கதை திரைக்கதையை ரசிகர்கள் நார் நாராக கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். மேலும் அவரை அவுட்டேட்டனா இயக்குநர் என்றும் விமர்சிக்கிறார்கள்.

மணிரத்னம்: பொன்னியின் செல்வன் 1,2 என இரண்டு பாகங்களும் வணிக ரீதியாக மணிரத்னத்திற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் இவரும் கமல்ஹாசனும் தக் லைஃப் படத்தில் இணைகிறார்கள் எனும்போது மொத்த ரசிகர்கள் பட்டாளமும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் மூலம் கமல்ஹாசன் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், தக் லைஃப் படமும் தோல்வி படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் இருவரின் திரைப்படமாக்கலை நினைத்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ்: அதாவது எப்படி இருந்த இயக்குநர்களால் தற்போது மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒரு வெற்றி கொடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு பேசிவருகிறார்கள். அதே நேரத்தில் இணையவாசிகள், இவர்கள் எல்லாம் அவுட்டேட்டேடான இயக்குநர்கள் என்றும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் அடுத்த அவுட்டேட்டேட் இயக்குநர் என்றால் அது ஏ.ஆர். முருகதாஸா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவரது கடைசி படமான சிகிந்தர் படம் ஹிந்தியில் காட்டு மொக்கைப் படம் என பெயர் பெற்றது. இவரது இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள்.

மதராஸி: ஆனாலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தேர்வு செய்துள்ளார் என்றால் அதில் கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் படத்தில் கமிட் ஆகமாட்டார். அதே நேரத்தில் அமரன் படத்திற்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் தரப்பில் இருக்கும் எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் கட்டாயம் உணர்வார். படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளதால் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்குமே இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிந்தர் படத்தின் தோல்வியை நினைத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொஞ்சம் பதற்றத்தோடு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











