Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
அறம்.. தீரன்.. அருவி.. - நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களால் ஏற்றம்பெறும் தமிழ் சினிமா! #Flashback2017
Recommended Video
சென்னை : தமிழ் சினிமாவில் வருடந்தோறும் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் வெளியாகும் நல்ல படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
முன்னணி நடிகர்களின் படங்கள் பல வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டாலும், நல்ல படம் என்கிற ரீதியில் பார்த்தால் தேறுவது வெகு சில திரைப்படங்களே.
சமூகத்திற்குத் தேவையான கருத்துகளோடு எடுக்கப்படும் மாற்று சினிமாக்கள் ரிலீஸுக்கு தியேட்டர்கள் கூட கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. அப்படி வெளிவந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறுவது ஒன்றிரண்டு படங்கள் தான்.
தமிழ் சினிமா
தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய பிறகு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி வருகிறது. இந்த ஆண்டிலும் அந்த எண்ணிக்கை 200 படங்களைத் தாண்ட உள்ளது.
நல்ல படங்கள்
200 படங்கள் வந்தாலும் 20 படங்களாவது நல்ல படங்களாக வந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ 10 படங்கள்தான் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல படங்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
இளம் இயக்குநர்களின் படங்கள்
நித்திலன் இயக்கத்தில் வெளிவந்த 'குரங்கு பொம்மை', ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த '8 தோட்டாக்கள்', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாநகரம்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர்கள் மூவருமே அறிமுக இயக்குநர்கள் என்பதும் சிறப்பு.
சில வாரங்களில் நல்ல படங்கள்
இந்த ஆண்டில் ஆச்சரியப்படும் வகையில் கடந்த நான்கு வாரங்களில் வெளிவந்த 25 படங்களில் 'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய படங்கள் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாயகிகளுக்கு முக்கியத்துவம்
அடுத்தடுத்து மிகச் சிறந்த படங்களைப் பார்ப்பது தமிழ் சினிமா எதிர்காலத்தில் இன்னும் மேம்படும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிலும் 'அறம்', 'அருவி' ஆகிய படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 படங்கள்
'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டின் டாப் 10 படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறும் வாய்ப்புள்ளது. வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அப்படிப்பட்ட படங்களில் நடிக்கும் நடிகர்களும் இன்னும் அதிகமானால் தமிழ் சினிமா நிச்சயம் தலைநிமிரும்.
வரவேற்பு கிடைக்க வேண்டும்
விமர்சன ரீதியாக நல்ல படங்கள் பேசப்பட்டால் மட்டும் போதாது. வசூல் ரீதியாகவும் நல்ல படங்கள் வெற்றி பெறுவது மட்டுமே அடுத்து வருபவர்களுக்கு ஊக்கமாக அமையும். தமிழ் சினிமா ரசிகர்கள் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி வித்தியாசமான சினிமாவை நோக்கைய தேடலைத் தொடங்கியிருக்கிறார்கள்.
சினிமா வளர்ச்சி பெறும்
ரசிக்கும்படியாகவும், சினிமா எனும் கலை ஊடகத்தை சமூகத்திற்கு கருத்து சொல்லும் வழியாகவும் செய்தால் ரசிகர்கள் ஈர்க்கப்படுவார்கள். நல்ல கலை வடிவம் நிச்சயம் அதற்கான பலனை அடைந்தே தீரும். இந்த வருடத்தின் இறுதி சில புது இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அடுத்தடுத்த வருடங்களும் தமிழ் சினிமா ஏற்றம் பெற வாழ்த்துவோம்.