புது காதலியோடு நடிகர் போடும் ஆட்டம்.. முன்னாள் மனைவியை கடுப்பேற்ற சபதம் போலயே!
சென்னை: இந்த நடிகர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்குள் வந்த போது இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நாளாக நாளாக இந்த நடிகர் போடும் ஆட்டத்தைப் பார்த்தால், நடிகர் பீர் என்ன அத்தோடு காய்ச்சியது, காய்ச்சாதது என எல்லாம் குடிப்பார் எனக் கூறும் அளவுக்கு இவரது அட்ராசிட்டி இருக்கிறது.
நடிகர் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்திற்கு மொத்த திரையுலகமும் சென்று வாழ்த்து கூறியது. காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் விரைவாகவே குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். குழந்தைகளே டீன் ஏஜில் இருக்கும்போது நடிகர் இப்போது தனது குடும்பத்தை விட்டுவிட்டு ரகசிய காதலியுடன் அடிக்கடி மீட்டிங்கில் இருந்துள்ளார். படத்தில் புக் ஆனால், தயாரிப்பாளரிடம் கொஞ்சம் பணத்தை தனது அக்கவுண்டிற்கும் கொஞ்சம் பணத்தை ரகசிய காதலியின் அக்கவுண்ட்க்கும் மாற்றியுள்ளார்.
இந்த தில்லாலங்கடி வேலையை நீண்ட நாட்களுக்குப் பின்னர் தான் நடிகரின் மனைவி கண்டுபிடித்தாராம். ஆனால் அதற்குள் நடிகரை அவரது ரகசிய காதலி முழுக்க முழுக்க தனது கைக்குள் போட்டு வைத்துக் கொண்டுள்ளார். இதனால் நடிகரின் மனைவி எவ்வளவோ போராடியும் தனது கணவரை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இது மட்டுமல்லாமல் நடிகரோ தனது முதல் மனைவியை கழட்டி விட்டுவிட்டு ரகசிய காதலியுடன் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு போக முடிவெடுத்து அதனை செயல்படுத்தவும் துணிந்து விட்டாராம்.

ரகசிய காதலிக்கு முன்னுரிமை: இதனால் நடிகர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் தனது குடும்பம் வரை அனைவரையும் விட்டு விட்டு ரகசிய காதலியை தனது பகிரங்க காதலியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறாராம். இவர் ஏதாவது நிகழ்ச்சிக்கு போனால் கூட ரகசிய காதலியை அழைத்துக் கொண்டே செல்கிறாராம். மேலும் அவரது ரகசிய காதலியும் தற்போது தமிழ் சினிமாவில் தனது நட்பு வட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ரகசிய காதலி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடிகர் கலந்து கொள்கிறாராம்.
மீண்டும் திருமணம்: அதுவும் குறிப்பாக தனக்கு ஷூட்டிங் இருந்தால் கூட கேன்சல் செய்துவிட்டு கலந்து கொள்கிறாராம். நடிகர் இது போல செய்யக் காரணமே தனது முதல் மனைவியை கடுப்பேற்றத்தான் எனவும், விவாகரத்து விஷயங்கள் அனைத்தும் முழுவதுமாக முடிந்து விட்டால் ரகசிய காதலியை மனைவியாக மாற்றிக் கொள்ளவும் திட்டமிட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











